நம் பாரத தேசத்தில் எண்ணற்ற மாதங்களும், ஜாதிகளும் உள்ளது. எனினும் தொன்மை வாய்ந்த மதமாக இந்து மதம் கருதப்படுகிறது. இந்துக்கள் கட்டாயம் தினமும் கடைப்பிடிக்க கூடிய சில கடமைகளை நாம் கடைப்பிடித்து வந்தால் வாழ்வில் எண்ணற்ற நன்மைகளை பெறுவதோடு மட்டுமல்லாமல் ஏற்றம் அடைய முடியும் என்ற உண்மையை உணர்ந்து நீங்கள் எந்த கடமையை கடைப்பிடித்து வாருங்கள். மாற்றம் உங்கள் வாழ்வில் ஏற்படுவதை நீங்களே பார்த்து உணர முடியும்.
இந்து மக்கள் தினசரி கடைபிடிக்க வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்
இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் தினமும் சூரியன் உதிப்பதற்கு முன்பே படுக்கையில் இருந்து எழுந்து விடுவது நல்லது. அது மட்டுமல்லாமல் காலை எழுந்தவுடன் காலை கடன்களை முடித்து நீராடிய பின்பு உணவருந்துவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தை தினமும் வழிபட்டு வாருங்கள்.
தினமும் நெற்றியை அப்படியே விட்டு விடாமல் திருநீர், குங்குமம், சந்தனம் என்று ஏதேனும் ஒன்றை அணிந்து விடுவதின் மூலம் உங்களுக்குள் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
Hinduவீட்டில் இறைவனுக்கு என்று தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி வழிபாடு செய்ய வேண்டும். காலையும், மாலையும் விளக்கேற்றி நறுமணப் புகையை போட்டு தெய்வத்தை நினைத்து வந்தால் உங்களுக்கு காரிய சித்தி ஏற்படும்.
வாரத்திற்கு ஒருமுறையாவது கோயிலுக்கு குடும்பத்தோடு சென்று வருவது மிகவும் சிறப்பானது. வீட்டில் அனைவருக்கும் தியானம் செய்யும் பழக்கம் வேண்டும்.
வீட்டில் பஜனை, சச்சங்கம் கதாகாலட்சேபம், சமயப் பேருரை போன்றவற்றை கேட்பதோடு குடும்பத்தோடு சென்று அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். வீட்டில் ஓம் என்ற சொல் பொறித்த படத்தை மாற்றி வைப்பது மிகவும் நல்லது.
Hinduபுராண, இதிகாச நூல்கள், தேவாரம், திவ்ய பிரபந்தம் போன்ற நூல்களை உங்கள் வீட்டில் கட்டாயமாக வைத்து உங்கள் பிள்ளைகளிடையே பக்தி மார்க்கத்தை வளர்க்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
பெற்றோர்களை தெய்வமாக போற்றி அவர்களுக்கு பணிவிடை செய்தல் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைவதோடு உங்கள் பிள்ளைகளுக்கு நீங்களே முன்னுதாரணமாக இருந்து இது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும்.
Hinduஉங்களுடைய அதிகரிக்கும் பால் உணர்வு, வன்முறை, பழிக்கிப்பழி வாங்கும் எண்ணம், பேராசை போன்ற தீய உணர்வுகளை விட்டு ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொரு மனிதரும் இன்று இருக்கிறோம். அதை உணர்ந்து அதற்கு தக்கவாறு நீங்கள் செயல்படுவது அவசியம்.
எனவே மேற்கூறிய இந்த கடமைகளை நீங்கள் தவறாமல் செய்வதின் மூலம் உங்களுக்கு நன்மையை ஏற்படும். நீங்களும் அதை கடைப்பிடித்து பாருங்கள் கட்டாயம் உங்களுள் ஏற்படும் மாற்றத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.