“இட்லி மா இருந்தா 10 நிமிடத்தில் தேன் மிட்டாய்..!” – வீட்டிலேயே செய்யலாம்..!

பாரம்பரிய இனிப்பு பண்டங்களில் ஒன்றான தேன் மிட்டாய் சுவைக்காத நபர்கள் இல்லை என்ற கூறும் அளவிற்கு சுவையானது. அதிலும் நன்கு ஊறி சர்க்கரை பாகு அதிலிருந்து வெளிவரும் போது அதை உண்ணும் போது சுவை அலாதியாக இருக்கும்.

Thaen Mittai

அப்படிப்பட்ட சுவையான தேன் மிட்டாயை உங்கள் வீட்டில் எளிதான முறையில் எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தேன் மிட்டாய் செய்ய தேவையான பொருட்கள்

1.அரிசி ஒரு கப்

2.உளுத்தம் பருப்பு கால் கப்

3.பேக்கிங் சோடா

4.கேசரி பவுடர்

5.சர்க்கரை ஒரு கப்

செய்முறை

உங்கள் வீட்டில் இருக்கும் இட்லி மாவோடு சிறிதளவு அரிசி மாவை கலந்து கொண்டு அதனோடு கேசரி பவுடர், பேக்கிங் சோடாவை நன்கு கலந்து நீங்கள் தேன் மிட்டாய் செய்யக்கூடிய மாவாக இன்ஸ்டன்ட் ஆக எந்த இட்லி மாவை பயன்படுத்தலாம்.

Thaen Mittai

அப்படி இல்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் முறைப்படி நீங்கள் அரைத்தும் செய்யலாம். முதலில் அரிசி மற்றும் உளுந்து பருப்பை நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். பின்னர் அரிசி மட்டும் உளுந்தை மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து நீங்கள் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்து ஒரு கப் அளவு நீர் சேர்த்து நன்கு கிளறி சர்க்கரை கரைந்து கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடுங்கள்.

இது இவ்வாறு கொதித்து கொண்டிருக்கும் வேளையிலேயே நீங்கள் அரைத்த மாவில் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கிளறி மாவு கெட்டியாகாமல் மிருதுவாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் இருக்கும் மற்றொரு அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடேற்றுங்கள்.

Thaen Mittai

எண்ணெய் சூடான உடன் நீங்கள் அரைத்து வைத்திருக்கும் மாவை சிறுசிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு பொரித்து எடுத்த இந்த உருண்டைகளை நீங்கள் சர்க்கரைப்பாகில் போட்டு நன்கு பிரட்டி இரண்டு மூன்று நிமிடங்கள் ஊற வைத்து விடுங்கள்.

பிறகு ஊறிய தேன் மிட்டாய் கடை எடுத்து தட்டத்தில் வைத்து சுவைத்து பாருங்கள். கடையில் வாங்கிய மிட்டாய் போல சூப்பர் டேஸ்டில் இருக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த தேன்மிட்டாயை விரும்பி சாப்பிடுவார்கள் மேலும் ஒரு வாரம் வரை இந்த தேன்மிட்டாய் நீங்கள் வைத்திருந்தாலும் அது கெட்டுப் போகாது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam