“ப்ரா கப்பு..” வெளிய தெரியுது..! – நடிகை சதா-வின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஸ்..!

சதா, (Sada)கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில், முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சதா அறிமுகமான முதல் படத்தில் குடும்ப குத்துவிளக்காக காட்டப்பட்டார். முதலில் இப்படி நடிக்க ஆரம்பித்த சதா நாளடைவில், கவர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார் என்பதுதான் தமிழ் சினிமாவில் நடக்கும் விசித்திரமான உண்மை.

இன்று பொன்னியின் செல்வன் படத்தில், அருள்மொழி வர்மன் கேரக்டரில் நடித்துள்ள ஜெயம் ரவியுடன் தான், பல ஆண்டுகளுக்கு முன் வந்த ஜெயம் படத்தில் சதா, கதாநாயகியாக அறிமுகமானார். தாவணி பாவாடையில், தலைநிறைய மல்லிகைப்பூவுடன், காலில் வெள்ளிக்கொலுசு அணிந்து, கல்லூரிக்கு ரயிலில் வரும் சதா, அந்த படம் பார்த்த ரசிகர்கள பலரது மனதை வசீகரித்தார்.

Sada

ஜெயம் ரவியை விட, படம் பார்த்த இளசுகள் பலரும் சதாவை ஒரு தலையாக காதலிக்கத் துவங்கினர். இந்த படம், அமோக வெற்றி பெற்றது. இதில் ஹீரோவாக அறிமுகமானதால், ரவி ‘ஜெயம்’ ரவியாக திரையுலக பயணத்தை வெற்றிக்கரமாக தொடர்கிறார்.

ஜெயம் படத்தின் வெற்றிக்கு பிறகு, சதா தொடர்ந்து பல படங்களில் நடித்தார். எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, எலி, டார்ச் லைட் என பல படங்களில் நடித்தார்.

ஸ்ரீகாந்த், விக்ரம், மாதவன், அஜீத், வினய் என முன்னணி நாயகர்களுடன் நடித்ததால், அடுத்தடுத்த படங்களில் சதா, மிக பிரபலமானார்.

Sada

அதுவும், ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் உடன் நடித்த அந்நியன், சதாவுக்கு நல்ல புகழை பெற்றுத் தந்தது. அம்பியின் காதலை மறுக்கும் நந்தினி, ரெமோவாக வரும் விக்ரமை காதலிப்பது, அம்பியின் காதலை மறுப்பதும், அம்பியின் நேர்மையான, அப்பாவித்தனத்தை பார்த்து அலட்சியப்படுத்துவதும் என, சிறந்த நடிப்பை சதா வெளிப்படுத்தி இருந்தார்.

ஆனால், நல்ல நடிகையாக இருந்தும், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாமல், ஒரு கட்டத்தில் சதா, கிளாமர் நாயகியாக மாறினார். அஜித், விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட சதா ஒரு கட்டத்தில், எலி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாகவும் நடித்தார்.

அதுமட்டுமின்றி, ஸ்டார்ச் லைட் என்ற படத்தில் ரோட்டோரத்தில் புளியமரத்தடியில் நின்று, லாரி டிரைவர்களை அழைக்கும் பெண்ணாகவும் இந்த படத்தில் நடித்து, அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

Sada

கடந்த 1984ம் ஆண்டில் பிறந்த சதாவுக்கு. வயது 39 ஆகிறது. இன்னும் சதா, இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இவரது முழுப்பெயர் சதாவ் முகமது சையது, இவரது தாய்மொழி மராத்தி. இவர் தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

முன்னணி நாயகியாக இருக்கும் வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்ற சதா, இன்று பட வாய்ப்புகளுக்காக, கிளாமர் ரோல்களில் நடித்து வருகிறார்.

Sada

நல்ல குடும்பப்பாங்கான தோற்றத்துடன் கதாநாயகியாக அறிமுகமாகும் பலரும், ஒரு கட்டத்தில் கவர்ச்சிநாயகியாக மாறுவதும், ஐயிட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதும் தமிழ் சினிமாவில் தொடர்கிறது. அந்த வகையில், இந்த விஷயத்தில் நாசூக்காக இருந்து நழுவியவர் நடிகை தேவயானி மட்டும்தான்.

அவர், சினிமா வாய்ப்புக்காக தன் இமேஜை இழக்காமல் கவுரவமாக சினிமாவை விட்டு விலகி, தனியார் பள்ளி ஆசிரியையாக, தன் வாழ்க்கை பயணத்தை மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sada

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை சதா, அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து, கிறங்கடித்து வருகிறார். இப்போது பச்சை நிற மாடர்ன் டிரஸ் அணிந்த சதாவின் இந்த புகைப்படங்கள் வைரலாகின்றன.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam