புரோட்டின் பவுடர்:பொதுவாகவே இன்று இருக்கக்கூடிய தலைமுறை இருக்கு புரோட்டின் குறைபாடு அதிக அளவு உள்ளது. இதற்கு காரணம் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அவர்கள் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது தான்.
மேலும் வயதானவர்களுக்கும் புரோட்டின் குறைபாடு இருப்பதின் காரணத்தால் நாம் அதை செய்ய மார்க்கெட்டுகளில் விற்கக்கூடிய புரோடீன் பவுடர்களை அவர்களுக்கு மாற்றாக கொடுத்து வருகிறோம்.
இனிமேல் கடைகளில் வாங்கி புரோட்டின் பவுடர்களை நீங்கள் பயன்படுத்த வேண்டாம். உங்கள் வீட்டிலேயே சுலபமான முறையில் புரோட்டின் பொடிகளை நீங்கள் செய்ய முடியும்.
அப்படி வீட்டிலேயே ஆரோக்கியமான புரோட்டின் பொடியை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
புரோட்டின் பவுடர் செய்ய தேவையான பொருட்கள்
1.பூசணிக்காயின் விதைகள் முக்கால் கப்
2.ஆளி விதைகள் முக்கால் கப்
3.சியா விதைகள் ஒரு டீஸ்பூன்
4.கொக்கோ பவுடர் ஒரு டீஸ்பூன்
5.பாதாம் 20
6.முந்திரி 10
செய்முறை
Protein powderமுதலில் மேற்கூறிய பொருட்களை அனைத்தையும் எடுத்து சுத்தப்படுத்தி வைத்துக்கொண்டு பிறகு அடுப்பில் அடிகணம் வாய்ந்த ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இந்த பொருட்கள் அனைத்தையும் போட்டு அடி பிடித்து விடாமல் இளம் தீயில் வறுத்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீங்கள் வறுக்கும் போது வாசனை வந்துவிட்டால் உடனே அடுப்பை அணைத்து விட வேண்டும். பிறகு இந்த பொருட்களை ஒரு தட்டிற்கு உடனே மாற்றி வைத்து விடுங்கள்.
இந்தப் பொருட்கள் சூடு தணியும் வரை காத்திருக்கவும். பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
Protein powderபிறகு இந்த பொடியை காற்று புகாத ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக்கொண்டு தினமும் நீங்கள் பயன்படுத்தலாம்.மேலும் இரண்டு வாரங்கள் வரை வெளியே அப்படியே வைத்திருந்தாலும் எதுவும் ஆகாது. ஆனால் நீங்கள் நன்கு டைட்டாக உங்கள் பாட்டிலை மூடி வைத்திருப்பதன் மூலம் இந்த பொடி கெட்டுப் போகாமல் இருக்கும்.
இதனை தொடர்ந்து இந்த பொடியை நீங்கள் பாலில் கலந்தோ அல்லது வெந்நீரில் கலந்தோ குடிக்கலாம். நீங்கள் அப்படி கலக்கிக் குடிக்கும் போது அதிக சூட்டில் இருக்கும் பாலில் போட்டால் புரோட்டின் சத்தானது மறைந்துவிடும் என்பதால் இளம் சூட்டில் கலந்து குடிப்பது தான் மிகவும் நல்லது.
எனவே இனிமேல் நீங்கள் கடைகளில் புரோட்டின் பவுடர் வாங்கி வந்திருந்தால் அதை தவிர்த்து விட்டு இதுபோல செய்து பாருங்கள். கட்டாயம் உங்களுக்கு ஆரோக்கியம் அதிகரிப்பதோடு ஒரு குறிப்பிட்ட தொகையை மிச்சப்படுத்தவும் முடியும்.