மதுரை ஆவின் நிறுவனத்தில் வேலை: கால்நடை மருத்துவம் முடித்தவர்களின் கவனத்திற்கு நீங்கள் எதிர்பார்த்து இருக்கக்கூடிய அரசு பணி மதுரையில் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது.
மதுரையில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக இருக்கக்கூடிய கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்காக மூன்று இடங்கள் உள்ளது. தற்போது இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Aavin job
இதற்காக தகுந்த ஆர்வமும், தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்காக நேர்காணலில் கலந்து கொண்டு தங்களது திறமையை நிரூபிப்பதன் மூலம் இந்த பணி இடங்களை பெற்று விட முடியும்.
இந்தப் பணியானது முழுக்க முழுக்க ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளது. மேலும் இந்த பணிக்கான சம்பளம் ரூபாய் 43000 என தெரியவந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் மாத சம்பளம் ரூபாய் 43,000 என்பதில் 30 ஆயிரம் சம்பளமாக இருக்கும்.Propulsion charges 8000 மற்றும் individual incentive 5000 என்ற வகையில் வழங்கப்பட உள்ளது.
Aavin job
மேலும் இந்தப் பணிக்கான கல்வித் தகுதியானது கால்நடை மருத்துவ படிப்பில் டி வி எஸ் சி (B.V.SC & A.H) அண்ட் ஏஎச் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அடிப்படை கணினி அறிவு இவர்களுக்கு இருக்க வேண்டும்.மேலும் கண்டிப்பாக இரு சக்கர வாகன உரிமம் பெற்றோருத்தல் அவசியமாகும்.
இந்த பணிக்கான விண்ணப்பதாரர்கள் வரும் 27ஆம் தேதி காலை ஒன்பதரை மணியளவில் உங்களது படிப்புக்கான சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் என உங்களிடம் இருக்கக்கூடிய ஒரிஜினல் சான்றிதழ்களோடு நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம்.
தேர்வு நடைபெறக்கூடிய இடம்
த ஜெனரல் மேனேஜர் மதுரை டிஸ்ட்ரிக்ட் கோ ஆப்ரேட்டிவ் மில்க் புரொடியூசர் யூனியன் லிமிடெட் மதுரை 636 020
தொலைபேசி எண்கள் 0452 2529561
மின்னஞ்சல் aavinmadurai1@gmail.com
மேலே கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய முகவரியில் வரும் 27 ஆம் தேதி தகுதியுடையோர் சென்று நேர்காணலில் உங்களது திறமையை வெளிப்படுத்தி இந்தப் பணியை பெறலாம்.
இந்த அற்புதமான வாய்ப்பை நழுவ விடாமல் உடனடியாக உரிய நடவடிக்கையை எடுத்து வேலையை பெற முயற்சி செய்யுங்கள்.