வேல் வழிபாடு: முருகனை வழிபடுவது தொன்று தொட்டு நமது பாரம்பரியத்தில் இருந்து வருகிறது. அவரின் வேல் வைத்து வணங்குவதோடு அந்த வேலுக்கான சிறப்பு வழிபாடுகளையும், செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் இந்த வேலானது முருகப்பெருமானுக்கு அவரது தாயாரான சக்தி வழங்கியதால் சக்தி வேல் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வேலினை வணங்குவதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடையலாம்.
வேல் வழிபாடு செய்வது அன்னை சக்தியையும், முருகனையும் ஒரு சேர வழிபடுவதற்கு ஒத்ததாகும். எனவே தான் இன்னும் பல முருகன் கோயில்களில் வேல் வழிபாடு என்பது நடைமுறையில் உள்ளது.
இந்த வேலினை கொண்டு தான் முருகப்பெருமான் சூரபக்தனை அழித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே தான் சூரசம்காரம் அன்று சூரனை சம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கும் போது முருகனுக்கு வியர்வை அதிகளவு ஏற்படும்.
Murugan Velpoojaநீங்கள் நினைத்ததை நிறைவேற்றித் தரக்கூடிய இந்த ஞான வேலை வழிபடுவதன் மூலம் நமக்கு பேராற்றல் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நினைத்த காரியமும் ஜெயமும் ஆகும்.
எல்லாவற்றையும் வெல்ல முருகனின் வேல் வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் வேல் வழிபாடு செய்வதின் மூலம் அறிவு, ஞானம், பொருள், இன்பம் போன்ற பதினாறு வகையான செல்வங்களும் நமக்கு வந்து கிடைக்கும்.
எனவே வேலுக்கும் முருகப்பெருமானுக்கு செய்வது போல பலவிதமான அபிஷேகங்களை செய்து நாம் வழிபடலாம். அவ்வாறு நம் வீட்டில் வேலினை வைத்து வழிபடும்போது எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளை வேரறுக்க கூடிய சக்தி இந்த வேலுக்கு உண்டு.
Murugan Velpoojaமேலும் இந்த வேலானது நமக்கு ஒரு பாதுகாப்பு அரணாக விளங்கும். தீய சக்திகளை நெருங்க விடாது.எதிரிகள் மூலம் ஏவி விடப்படும் ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றை தடுக்கக்கூடிய அற்புத ஆற்றல் இந்த முருக வேலுக்கு இருப்பதால் வேல் வழிபாட்டை செய்யக்கூடிய வீடுகளில் எப்போதும் நன்மை நடக்கும், மகிழ்ச்சி கிடைக்கும்.
எனவே தினமும் அதிகாலை எழுந்து குளித்து முடித்தவுடன் நீங்கள் ஈரத் துணியை உடுத்திக் கொண்டு வேலுக்கு அபிஷேகம் செய்வதின் மூலம் மேற்கூறிய நன்மைகளை எளிதாக பெற முடியும்.
வேலுண்டு வினையில்லை என்ற மந்திர வார்த்தைகளுக்கு ஏற்ப நீங்கள் வேல் வழிபாடு செய்து முருகப்பெருமானின் அருளை பெறுவதோடு அன்னை சக்தியின் அருளையும் பெற்று வாழ் வாங்கு வாழலாம்.