மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து நடிகை விஜயசாந்தி வெளியிட்ட தகவல்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை விஜயசாந்தி( Actress Vijaya Shanthi ) லேடி சூப்பர் ஸ்டார் என்று, தெலுங்கு சினிமாவில் அழைக்கப்பட்டவர். இப்போது, அந்த பட்டம் நயன்தாராவுக்கு எப்படியோ வந்துவிட்டது.

ஆனால், உண்மையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு முழுமையான தகுதிக்கு உரியவர் விஜயசாந்தி தான். சினிமாவில் மட்டுமின்றி, நிஜ வாழ்விலும் அவர் தைரியமான பெண்ணாக இருந்து வருகிறார். அரசியல்வாதியாகவும், மக்கள் பணி செய்து வருகிறார்.

வைஜெந்தி ஐபிஎஸ் என்ற படத்தில், போலீஸ் அதிகாரியாக விஜயசாந்தி நடித்திருப்பார். வில்லன்களை, ரவுடிகளை எதிர்க்கும் ஒரு கடமை நேர்மையான, தைரியமான போலீஸ் அதிகாரியாக அதில் விஜயசாந்தி கம்பீரமான நடிப்பை தந்திருப்பார்.

இந்த படம் தெலுங்கு, தமிழில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

Actress Vijaya shanthi

இதைத்தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் பட படங்களில் நடித்தார். இதில் பி வாசு இயக்கிய மன்னன் என்ற படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மனைவியாக நடித்தார். அதுவும் ஒரு பேக்டரி முதலாளியாக, ஆணவம் பிடித்த பெண்ணாக, ஆண்களை அடிமைப்படுத்தும் ஒரு கேரக்டரில் விஜயசாந்தி நடித்திருந்தார்.

அதில், கணவர் கேரக்டரில் நடித்த ரஜினிகாந்த், விஜயசாந்தியை க்ளைமாக்சில் திருத்துவார். இதில், ரஜினியை மட்டம் தட்டி, எதிர்த்து பேசும் திமிரான கேரக்டரில் நடிக்க, விஜயசாந்தியை விட வேறு யார் நடித்தாலும் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருக்காது என்பதால், விஜயசாந்தியை பி வாசுவும், ரஜினியும் பேசி நடிக்க வைத்தனர். மன்னன் படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

Actress Vijaya shanthi

இதுவரை 186 படங்களுக்கு மேல் நடித்துள்ள விஜயசாந்திக்கு இப்போது 57 வயதாகிறது. அதிரடி சண்டை காட்சிகளில் இவர் நடித்ததால், தென்னிந்திய திரைப்பட உலகில், இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரசிகர்களால் கிடைத்தது. தமிழில், கல்லுக்குள் ஈரம் என்ற பாரதிராஜாவின் படத்தில் விஜயசாந்தி நடித்திருக்கிறார்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பிறமொழி படங்களில் நடித்த விஜயசாந்தி, கடந்த 1991ம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். கடந்த 2009 முதல் 2014 வரை எம்.பி ஆக இருந்திருக்கிறார்.

Actress Vijaya shanthi

ஆந்திர அரசியலில் பரபரப்பாக இயங்கி வரும் விஜயசாந்தி, சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தன்னை அதிமுகவில் வந்து இணைந்துகொள்ளுமாறு கூறியதாகவும், மிக தைரியமான பெண்ணான உனக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு தருவதாகவும் கூறியதாகவும் விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.

ஆந்திர அரசியலில் இருப்பது போன்ற ஆர்வமும், இங்குள்ள அரசியல் சூழலும் எனக்கு மிக பிடித்திருக்கிறது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, தமிழக அரசியலில் ஈடுபட எனக்கு விருப்பம் இல்லாததால், ஜெயலலிதாவே அழைத்தும் நான் அவரது கட்சிக்கு செல்லவில்லை என்று கூறி இருக்கிறார்.

Jayalalithaa

ஜெயலலிதா இருக்கும் வரை இந்த தகவலை வெளியே சொல்லாத விஜயசாந்தி, அவர் மறைந்து சில ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த தகவலை கூறியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உண்மையிலேயே ஜெயலலிதா, விஜயசாந்தியை தமிழக அரசியலுக்கு அழைத்தாரா, அல்லது அரசியலில் பப்ளிசிட்டி தேடுவதற்காக இப்படி விஷயத்தை விஜயசாந்தி கிளப்பி விடுகிறாரா என, சமூக வலைதளங்களில் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam