மலையாள பேரழகியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ( Nayanthara ) தமிழில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து ஐயா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆரம்ப திரைப்படத்திலேயே தனது அற்புதமான திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவரை உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஏகோபித்த ஆதரவை பெற்று விட்டு இன்று லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்திருக்கிறார்.
எனினும் இவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட சறுக்கல்களை சந்தித்த பிறகு இயக்குனரான விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் என்ற படத்தில் காது கேட்காத பெண்ணாக நடித்திருந்தார்.
இந்த சமயத்தில் தான் இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டதாம். இதனை அடுத்து அண்மையில் திருமணம் செய்து கொண்டு மூன்றே மாதத்தில் வாடகை தாயாரின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் வித்தியாசமான பெயரை வைத்து அனைவரையும் அசத்தி இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி உடன் இணைந்து கொடுத்த பேட்டி ஒன்றில் நானும் ரௌடி தான் படத்தில் நயன்தாராவோடு இணைந்து பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
Nayantharaமேலும் அந்தப் படத்தில் விஜய் சேதுபதியோடு ரொமான்ஸ் காட்சிகளில் மிகவும் நெருங்கி நடிக்க வேண்டிய தருணத்தில் அந்த காட்சிகளை மாடிஃபிகேஷன் செய்து டிராபிக்கில் செய்து விடலாமே என்று கேட்டுக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் நான் தான் அப்படி செய்தால் சரியாக இருக்க முடியாது என்று அவரை மிகவும் நெருக்கமாக அந்த காட்சியில் நடிக்க வைத்தேன்.
Nayantharaஇதை எடுத்து இந்த காட்சி முடிந்த பின் என்னிடம் வந்து அவர் என்னை சைக்கோ என்று திட்டிச் சென்றதாக தற்போது அவர் கூறி இருக்கக்கூடிய செய்தி வைரலாக ரசிகர்களின் மத்தியில் பரவி விட்டது.
அது மட்டுமல்லாமல் வருங்கால மனைவியாக வரக்கூடிய இவரை லிப் லாக் காட்சியில் நடிக்க வைத்ததை எண்ணி அனைவரும் ஆச்சரியம் அடைந்து இருக்கிறார்கள்.
மேலும் தற்போது ஒரு மிகப்பெரிய பேசும் பொருளாக மாறிவிட்ட இந்த பேட்டியை பற்றி தான் அனைவரும் பேசி வருகிறார்கள்.