பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஹேமா ராஜ்குமார் ( Hema Rajkumar ). சமீபத்தில் இந்த சீரியலில் நடித்தது குறித்த தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையை பற்றிய என்னிடம் கூறும் பொழுது ஒற்றுமையான குடும்பம் ஒரு கட்டத்தில் பிரியும் என கூறினார்கள் எனது கவலையாக இருந்தது.
அதனை தொடர்ந்து கடைசியாக அந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும் எனவும் கூறினார்கள். இப்படித்தான் அந்த சீரியலில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் ஆயிரம் எபிசோடுக்கு பிறகு தான் குடும்பம் பிரியும் என என்னிடம் சொல்லவே இல்லை.
நானும் எப்போ டா குடும்பம் பிரியும் என எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் போதும் இப்போ பிரிந்து விடும்..! அப்போது பிரிந்து விடும்..! என யோசித்துக் கொண்டே இருந்தேன்.
ஒரு கட்டத்தில் இனிமேல் குடும்பம் பெரிய வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு நான் வந்து விட்டேன். கடைசியாக ஒரு வழியாக குடும்பம் பிரிந்து விட்டது. இதற்கு இவ்வளவு நாள் ஆகிவிட்டது.
Hema Rajkumarஎனக்கு கதை சொல்லும் பொழுது மீனா என்ற கதாபாத்திரம் மிகவும் சுறுசுறுப்பான கதாபாத்திரம் மனதில் பட்டதை பளிச்சன பேசக்கூடிய கதாபாத்திரம் 90ஸ் கேர்ள்ஸ் என்று கூறினார்கள்.
பேசுவதை பேசிவிட்டு அதன் பிறகு வருத்தப்படும் விதமான கதாபாத்திரமாக இருக்கும் எனவும் கூறினார்கள். இதற்கு முன்பு நான் நடித்த சின்னத்தம்பி சீரியல் ஏழ்மையான பெண்ணாக நடித்தேன். பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கதாபாத்திரம் அதற்கு அப்படியே எதிர்மறையான ஒரு கதாபாத்திரம்.
அதை அனைவரும் எப்படி பார்ப்பார்கள் என பயமாக இருந்தது. ஆனால் படக்குழு உடன் நடித்த நடிகர்கள் என அனைவருமே எனக்கு ஒத்துழைத்தார்கள்.
Hema Rajkumarஎனக்கும் மீனா கதாபாத்திரத்திற்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது. ஆனால், கேமரா ஆன் செய்துவிட்டால் போதும் நான் முழுமையாக மாறிவிடுவேன்.
என்னுடைய கதாபாத்திரம் பலருக்கும் என்னை பிடிக்கவில்லை. என்னிடம் நேரடியாகவே பலரும் கூறினார்கள் என்னை திட்டினார்கள் எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. இயக்குனரிடம் போய் உனக்கு நடந்த விஷயங்களை கூறினேன்.
இங்கே பாருங்க, உங்களுடைய கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்றால் உன்னுடைய நடிப்பு நல்லா இருக்கு என்று அர்த்தம் உன் கதாபாத்திரம் அவர்களுக்கு மனதில் பதிந்து விட்டது என அர்த்தம் என என ஆசுவாசப்படுத்தினார். தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன்.
Hema Rajkumarமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகக்கூடிய மௌன ராகம், கனா காணும் காலங்கள், உள்ளிட்ட சீரியல்களை மிகவும் விரும்பி பார்ப்பேன்.
கனா காணும் காலங்கள் சீரியல் ஆடிசனின் நான் செலக்ட் ஆகி விடுவேன் என்று நினைத்தேன். செலக்ட் ஆகி விட்டேன். ஆனால் வீட்டுக்கு தெரியாமல் தான் அந்த ஆடிஷனில் போய் கலந்து கொண்டேன்.
Hema Rajkumarஆற்வக்கோளாறில் தவறுதலாக என்னுடைய அப்பா போன் நம்பரை கொடுத்து விட்டு வந்து விட்டேன். அவர்கள் என் அப்பாவுக்கு நான் தேர்வான விபத்தை கூறிவிட்டார்கள். அதன் பின் வீட்டில் என்னை வெளுத்து வாங்கி விட்டார்கள்.. அப்பா அடி பிரிச்கிட்டார்.. அதன் பிறகு நடிக்கும் ஆசையை அடக்கி வைத்திருந்தேன்.
ஆனாலும் சூழ்நிலை காரணமாக மீண்டும் நான் சீரியலில் நடிக்க வந்து விட்டேன் என கூறியிருக்கிறார்.