ஹிந்தி திரைப்படத்துறையில் முன்னணி கதாநாயகனாக திகழும் சல்லு பாய் ( Sallu Bhai ) என அவரது ரசிகர்களால் அழைக்கப்படும் சல்மான் கான் ( Salman Khan ) பற்றி அதிக அளவு யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தனது அற்புத நடிப்பு திறனால் அனைவரையும் கவர்ந்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கும் இவர் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்று கூறலாம்.
அண்மையில் இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமான வீரம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு கிசி கி பாய் கிசி கி ஜான் என்ற பெயரில் வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் சல்மான் கான் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்திய போதும் மக்களிடையே அது ஒரு பெரிய வெற்றியை பெற்று தரவில்லை என்று தான் கூற வேண்டும்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த படத்தில் கஜபதி பாபு, பூமிகா, சல்வா ராகவ் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
எனினும் சல்மான் கானின் கெட்டப்பை எந்த படத்தில் பாட்டு ரசிகர்கள் பலவிதமாக அவரை கிண்டலாக கேலி செய்திருந்தார்கள். இதில் வைத்திருந்த லாங் ஹேர் ஐ பார்த்து இதுபோல இந்த படத்தில் இவருக்கு ஹேர் ஸ்டைல் இருந்திருக்க தேவையே இல்லை.
இதை பார்த்ததுமே படம் நன்றாக இல்லை என்பதை நாங்கள் இப்போதே புரிந்து கொண்டோம் என்பது போல பலவிதமான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள்.
Salman Khanஅதுமட்டுமல்லாமல் இதனை அடுத்து சல்மான் கான் தனது முன்னாள் காதலிகளை குறித்து உருக்கமாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் அவர் காதல் செய்த போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் பிரேக்கப் ஆன போது அந்தப் பெண் மீது இவர் எவ்வளவு கோபப்பட்டார் என்பதை மிகவும் உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்தினார்.
Salman Khanஅது மட்டுமல்லாமல் அவர் கோபப்பட்டது எந்த அளவு தவறு என்பதை தற்போது உணர்ந்துள்ளதாகவும் தனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும் ஆனால் குழந்தையை திருமணம் ஆகாமல் பெற்றுக் கொள்ள சட்டம் உதவி செய்யாதே என்பதை வருத்தமாக பேசி இருக்கிறார்.
இதனை அடுத்து சில ரசிகர்கள் இவரது உருக்கமான அந்த பதிவுக்கு ஆதரவான சில வாக்கியங்களை கண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் சிலர் ஓவராக இது உள்ளது என்று கலாய்த்தும் தள்ளி இருக்கிறார்கள்.