ஒரே பொருள்… பசங்க வாங்குனா 50 ரூவா..? பொண்ணுங்க வாங்குனா 300 ரூவா..? – டிக்டாக் தீபிகா வேதனை..!

டிக் டாக் தீபிகா ( Deepika V ) இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி வருவார் என ரசிகர்களை பெற்றிருப்பவர் தீபிகா.

கேளிக்கையான வீடியோக்கள் ரொமாண்டிக் வீடியோக்கள் என விதவிதமான வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் தீபிகா சமீபத்தில் இணைய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

Deepika V

அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட இவர் ஒரே பொருள் ஆனால் அதை ஆண்களுக்காக வாங்கும் பொழுது விலை குறைவாகவும் பெண்களுக்காக வாங்கும் பொழுது விலை அதிகமாகவும் இருக்கிறது இதற்கு என்ன காரணம் என்று எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது என பதிவு செய்திருக்கிறார்.

முடியை சேவ் செய்யக்கூடிய ரேசர் ஆண்களுக்கு வாங்கினால் வெறும் ₹50 தான். ஆனால் அதுவே பெண்களுக்கு வாங்கினால் 300 ரூபாய் ஆகின்றது. ஆண்கள் முடி வெட்டுகிறார்கள் அவர்களுக்கு 100 ரூபாய் மற்றும் அதற்கு குறைவாகத்தான் செலவாகிறது.

Deepika V

ஆனால் பெண்கள் முடிவெட்டினால் 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் என செலவாகிறது. இதுபோன்ற சின்ன சின்ன கேள்விகள் எனக்குள் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசிக்கும் பொழுது பெண்கள் என்றால் இப்படித்தான் என்று அப்படியே வளர்ந்து வந்து விட்டோம். அதற்கு பழக்கப்பட்டு விட்டோம். பிறந்தது முதல் நாம் என்றால் பெண்கள் என்றால் இப்படித்தான் என்று ஒரு மனநிலையை நாம் இருக்கின்றோம்.

Deepika V

சாதாரணமாக இருக்கும் என்னால் என்ன செய்ய முடியும் அதிகபட்சமாக புகைப்படத்திற்கு கேப்ஷனாக வைக்க முடியும் அல்லது கருத்து தெரிவிக்க முடியும்.

இதுபோல வீடியோவை பேசினாலோ அல்லது எதிர்ப்பு தெரிவித்தாலோ என்னுடைய சேனலையே தூக்கி விடுவார்கள் என்ற பயமும் இருக்கிறது. இது என்னிடம் பல பேர் கூறியிருக்கிறார்கள் இதை நீ சொன்னால் கேட்க மாட்டார்கள் ஆனால் பெரிய நடிகை நடிகர்கள் சொன்னால் கேட்பார்கள்.

Deepika V

நாம் ஒரு விஷயத்தை உரக்க சொல்ல வேண்டும் என்றால் கூட நமக்கென்று ஒரு இடம் தேவைப்படுகிறது ஒரு உயரம் தேவைப்படுகிறது என தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார் இவருடைய இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam