தமிழ் சினிமாவின் நவரச நாயகன் கார்த்திக் மகன்தான் கெளதம் கார்த்திக் (Gautham Karthik) கடந்த 1980– 90களில், தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் கார்த்திக். கமலுக்கு அடுத்தபடியாக நடிப்பில் அசகாய சூரனாக இருப்பதால், நவரச நாயகன் கார்த்திக் என்ற பட்டப்பெயர் இவருக்கு கிடைத்தது.
நடிப்பை பொருத்தவரை யாருடைய சாயலும் இல்லாமல் நடிக்கும் சிறந்த கலைஞர். சில படங்களில், கார்த்திக் பாடவும் செய்திருக்கிறார்.
கார்த்திக் நடித்த பல படங்கள் வெள்ளிவிழா கண்டிருக்கின்றன. இப்போதும், கார்த்திக் படங்களை ரசிப்பதற்கு என்று தனியாக ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. அன்றைய கல்லூரி மாணவிகளின் கனவு நாயகன் கார்த்திக் தான். மாப்பிள்ளை, நடிகர் கார்த்திக் போல இருக்க வேண்டும் என அன்று ஆசைப்பட்ட பெண் வீட்டார் அதிகம்.
Goutham karthickசோலைக்குயில் என்ற படத்தில் நடித்தபோது, தன்னுடன் கதாநாயகியாக நடித்த ராகினியை காதலித்து, மனைவியாக கரம்பிடித்தார். அவர்களது மகன்தான் கெளதம் கார்த்திக். கடந்த 2013ம் ஆண்டில், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய கடல் என்ற படத்தில், கெளதம் கார்த்திக் அறிமுகமானார்.
தொடர்ந்து முத்துராமலிங்கம், செல்லப்பிள்ளை, பத்துதல, சிப்பாய், ஆகஸ்ட் 16, 1947, யுத்த சத்தம், ஆனந்தம் விளையாடும் வீடு, தேவராட்டம், இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன், ரங்கூன், இந்திரஜித் இவன தந்திரன், ஹரஹர மஹாதேவகி, வைராஜா வை உள்ளிட்ட படங்களில் கெளதம் கார்த்திக் நடித்திருக்கிறார்.
இதில் சில படங்கள், கெளதம் கார்த்திக் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய படங்கள். இதில் சமீபத்தில் வெளிவந்த பத்து தல, ஆகஸ்ட் 16, 1947 ஆகிய படங்கள், நல்ல முறையில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று, திரையில் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில், தேவராட்டம் படத்தில் நடித்த போது, கதாநாயகியாக நடித்த மஞ்சிமாவுடன், காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 2021ல், திருமணம் செய்துகொண்டனர்.
Goutham karthickகெளதம் கார்த்திக்கை பொருத்தவரை, சொந்த உழைப்பில் முன்னேறி வரும் ஒரு இளம் நடிகராக இருக்கிறார். தமிழ் சினிமா கொண்டாடிய நவரச நாயகன் கார்த்திக் மகன் என்ற அடையாளத்தை அவர், பெரும்பாலும் வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருக்கிறார். கடந்த கொரோனா காலத்தில், தனது கார் மற்றும் பைக்கை விற்றுவிட்டதாக கூறி இருக்கிறார்.
அதேபோல், மஞ்சிமாவை திருமணம் செய்துகொண்ட போதும், கல்யாண மாப்பிள்ளையாக இருந்தும், திருமண ஏற்பாடுகளை இவரே செய்திருக்கிறார். அதுபோன்ற நெருக்கடியான இருந்த நேரங்களில் தனக்கு ஆறுதலாக, உதவியாக இருந்தது தனது மனைவி மஞ்சிமா என்றும் கெளதம் கார்த்திக் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
Manjimaசிவாஜி காலத்து தமிழ் சினிமாவில் இருந்த நடிகர் முத்துராமனின் மகன் தான் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்தில், தனது மகன் நடிப்பதை காண ஆவலாக வந்திருக்கிறார் முத்துராமன்.
ஆனால், தந்தை முன்னால் நடிப்பது சங்கோஜமாக இருக்கும் என்று, கார்த்திக் கூறியதால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருக்கிறார் முத்துராமன். அதற்கு பின், அவர் காலமாகிவிட, பல பேட்டிகளில் இதுபற்றி சொல்லி வருத்தப்பட்டவர் கார்த்திக்.
ஆனால், அவரது மகன் கௌதம் கார்த்திக் பொருளாதார சிரமங்களில் தவிக்கும்போது, ஒரு தந்தையாக மகனுக்கு உதவாமல், அவர் அலட்சியப்படுத்துவது ரசிகர்களை வேதனைப்படுத்துகிறது.
karthickசினிமாவில் சிறந்த நடிகர், மகன் விஷயத்திலும் நல்ல தந்தையாக செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்பதே, ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சினிமா வாய்ப்புகள் குறைந்த ஒரு காலகட்டத்தில் நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை துவக்கினார் கார்த்திக்.
அந்த கட்சி இப்போது செயல்பாட்டில் இருக்கிறதா..? அல்லது அந்த கட்சியில் கார்த்திக் இப்போதும் இருக்கிறாரா..? என்பதே அவருக்கே தெரியாது என்பதுதான் இதில் வருத்தப்பட வேண்டிய மற்றொரு விஷயம். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.