கூகுளில் 15 இடத்தில் இருக்கிறாரா? நடிகர் விஜய்… அதுவும் அதிக தேடப்பட்ட ஆசிய நடிகர்களின் வரிசையில்…!!

Google என்பது தேடுதல் நிமித்தமாக இருக்கக்கூடிய ஒரு வலைத்தளம் ஆகும். இந்த வலைத்தளத்தில் எண்ணற்ற விஷயங்களை தேடிப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது என கூறலாம்.  அது எந்த துறையை சார்ந்தும் இருக்கலாம் அல்லது துறை சாராத விஷயமாகவும் இருக்கலாம்.

 இந்த வருடத்தை பொறுத்தவரை அதிகம் தேடப்பட்ட நடிகர் மற்றும் நடிகைகள் வரிசையில் யார் யார் வருகிறார்கள் என்றும், அதிகமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்ட பாடல்கள் என்னென்ன என டாப் 100 பட்டியல்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரசியில் தற்போது இந்த வருடம் google அதிகம் தேடப்பட்ட 100 ஆசிய நடிகர்களின் பட்டியல் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது என கூறலாம்.

 இதற்குக் காரணம் இந்த பட்டியலில் தமிழ் சினிமாவை சேர்ந்த ஐந்து பேர் இடம் பிடித்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் தான். இதில் மக்கள் விரும்பும் தளபதி விஜய்க்கு 15 வது இடம் கிடைத்திருக்கிறது.

 அதுமட்டுமல்லாமல் சூர்யாவுக்கு 45 வது இடமும், தனுஷுக்கு 46வது இடமும், நடிகர் ரஜினிகாந்த் 68-வது இடமும் தல அஜித்துக்கு 78வது இடமும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 மேலும் இதை  கடந்த ஆண்டோடு ஒப்பிட்டு நோக்கையில் போன வருடமும் அதிகளவு தேடப்பட்டவர்களின் பட்டியல்களில் நடிகர் விஜய் இடம் பிடித்திருந்தார்.

 அப்போது அவருக்கு 19 வது இடம் கிடைத்திருந்தது இதனை அடுத்து இவர் 15 வது இடத்துக்கு தற்போது முன்னேறி இருக்கிறார் என்பது சிறப்பான விஷயமாகும்.

மேலும் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடும் தோல்வியை சந்தித்தபோதும் இவரின் வாரிசு திரைப்படமானது வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் கூகுளில் அவர்கள் ரசிகர்கள் தேடுதல் வேட்டையில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் தான் விஜய்க்கு இந்த இடம் கிடைத்துள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version