லேடி சூப்பர் ஸ்டாரை டம்மி ஆக்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! – அடேங்கப்பா..!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். குறுகிய காலத்தில், நல்ல படங்களில் சிறந்த முறையில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். பா. ரஞ்சித் இயக்கத்தி்ல், அட்டக்கத்தி படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமானார். அதில் சில காட்சிகளே வந்தாலும், ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். அதனால், ஆரம்பத்தில் அட்டக்கத்தி ஐஸ்வர்யா என அழைக்கப்பட்டார்.

ரம்மி படத்தின் மூலம் ரசிகர்களிடம், இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதன்பின் நடித்த பல படங்களில், இவரது நடிப்பு பலராலும் கவனித்து பேசப்பட்டது.

கனா, காக்கா முட்டை இவரது சினிமா கேரியரில் மிக முக்கியமான படங்களாக அமைந்தன. திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி போன்ற படங்களும், அதிக ஈர்ப்பை ஏற்படுத்திய படங்களாக உள்ளன.

சொந்த வாழ்வில் பல சிக்கல்களை, சிரமங்களை, கஷ்டங்களை கடந்து வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதை பலமுறை அவரே நேர்காணலின் போது வெளிப்படையாக கூறி இருக்கிறார். இதுபோல், துன்பத்தில் தவிப்பவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர் சிவகார்த்திகேயன். அதனால்தான் கனா படத்திலும், நம்ம வீட்டுப்பிள்ளை படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ;நடிக்க சிவகார்த்திகேயன் வாய்ப்பு தந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், பிக்பாஸ் மூலம் பிரபலமானார். இப்போது, மைடியர் டயானா என்ற வெப் சிரீஸ் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்நிலையில், நயன்தாராவுக்கு வரும் பட வாய்ப்புகள் பலவும், ஐஸ்வர்யா ராஜேஷை, தேடி வருவதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா.

மாயா படத்துக்கு பிறகு,.கதாநாயகியை மையப்படுத்தி கதைகளில் இவர் நடிக்க துவங்கினார். இதனால், இவரது இமேஜ் அதிகரித்தது. பெண்கள் மத்தியில், நயன்தாராவுக்கு புகழ் ஏற்பட்டது.

இந்நிலையில், விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்ட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார். மேலும், இவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால், கால்ஷீட்டுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.

இவர் சொல்லும் நிபந்தனைகளுக்கு மறுபேச்சின்றி கட்டுப்பட வேண்டும், மேலும், இவருக்கு மிக அதிகப்படியான சம்பளமும் தர வேண்டும். நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க ரூ. 30 கோடி சம்பளம் பெறுவதாக தகவல் உள்ளது.

இந்நிலையில், குறைந்த சம்பளத்தில் நல்ல நடிப்பை தரும் ஐஸ்வர்யா ராஜேஷின் பக்கம், பலரது பார்வை திரும்பியுள்ளது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் அவரது படங்களும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதால், நயன்தாராவுக்கு செல்ல வேண்டிய பட வாய்ப்புகள் பல, ஐஸ்வர்யா ராஜேஷிடம் வந்ததாக தெரிகிறது. பெண்களை மையப்படுத்தி எடுக்கும் கதைகள், நயன்தாராவை போல, இவருக்கும் சரியாக இருப்பதால் அத்தகைய பட வாய்ப்புகள் அதிகமாக வருவதாக, தகவல்கள் பரவி வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version