நடிகை அமலா-வின் முதல் கணவர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில், நடிப்பில் கொடி கட்டி பறந்தவர் நடிகை அமலா. அமலா அக்கினேணி. ஒரு இனிய உதயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.கடந்த 1990களில், தமிழில் பல படங்களில் இவர்தான் கதாநாயகி. வேலைக்காரன், மாப்பிள்ளை, கொடி பறக்குது போன்றவை இவர் ரஜினியுடன் நடித்த படங்கள். கமலுடன், சத்யா, வெற்றி விழா ஆகிய படங்களில் நடித்தார்.

மெல்லத் திறந்தது கதவு, வேதம் புதிது இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படங்களாக அமைந்தன. ராதா, அம்பிகா, நதியா போன்ற நடிகைகள் வரிசையில், அமலா முக்கிய நடிகையாக அப்போது வலம் வந்தார்.

ஜீவா, கற்பூர முல்லை, மெளனம் சம்மதம், மூடுமந்திரம், நாளைய மனிதன், நெத்தியடி, உத்தம புருஷன், அக்னி நட்சத்திரம், மைதிலி என்னை காதலி, கண்ணே கனியமுதே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அப்போது படங்களில் அமலா அணிந்துவரும் ஆடைகள், அவர் அணியும் பேஷன் டிசைன் மெட்டீரியல்ஸ் என, ஜவுளிக் கடைகள் மற்றும் பேன்ஸி கடைகளில் அதிகளவில் விற்பனை ஆகும் அளவுக்கு, பெண்களுக்கும் அவர் அழகு தேவதையாக படங்களில் தெரிந்தார்.

தெலுங்கு, மலையாள மொழி படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார் அமலா.வயதான நிலையிலும், அமலாவின் சினிமா ஆர்வம் குறையவில்லை. கடந்தாண்டில் கூட, ஜங்சன், கணம் ஆகிய படங்கள் தமிழில் வெளிவந்தன.

சினிமாவில், பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கும்போதே,, தெலுங்கில் பிரபலமாக இருந்த நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்துகொண்டார். தோழா படத்தில், கார்த்தியின் பணக்கார முதலாளியாக, ஆனால் நடக்க முடியாத நோயாளியாக நடித்திருப்பாரே அவர்தான், நாகார்ஜூனா.

இவர்களது மகன் நாக சைதன்யாவை தான் பிரபல நடிகை சமந்தா, திருமணம் செய்துகொண்டு தற்போது பிரிந்து விட்டார் என்பது கூடுதல் தகவல். சமந்தாவின் மாமியாரான அமலா, நாகார்ஜூனாவுக்கு இரண்டாவது மனைவி என்ற புது தகவல் தற்போது கிடைத்துள்ளது.

நாகார்ஜூனா, 1984ல், லட்சுமி டகுபதி என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதன்பின்னர், 1992ல், அமலாவை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார் நாகார்ஜூனா.

அமலா, நாகார்ஜூனாவின் இரண்டாவது மனைவி என்ற தகவல் தற்போது வைரலாகி வரும் நிலையில், நாகார்ஜூனா முதல் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.

அமலா, பிராணிகள் நல அமைப்பில், முக்கிய உறுப்பினராக இருக்கிறார், பிராணிகள் வதைப்புக்கு எதிரான தனது குரலை பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version