விடுதலை பட நடிகை பவானி ஸ்ரீ இந்த இசையமைப்பாளரின் தங்கையா..? – அட இது தெரியாம போச்சே..!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகைகளில் ஒருவர் பவானிஸ்ரீ. இவர், நடிகர் விஜய் சேதுபதி நடித்த க.பெ ரணசிங்கம் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின்பு, பாவ கதைகள் என்ற சீரிஸில் நடித்திருந்தார்.

தற்போது, தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘விடுதலை’ படத்தில், மலைவாழ் கிராமப் பெண்ணாக நடித்திருக்கிறார் பவானிஸ்ரீ.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது விடுதலை படம். இந்த படத்தின் மூலம், ஒரு முக்கிய அரசியலை, வெற்றிமாறன் கையில் எடுத்திருக்கிறார் என்று பரவலாக பேசப்படுகிறது.

குறிப்பாக, காமெடி நடிகரான சூரியை கதாநாயனாக்கிய பெருமை வெற்றிமாறனையே சாரும். எனக்குள் இருந்த குமரேசனை கண்டுபிடித்ததே அண்ணன் வெற்றிமாறன்தான் என, தனது ஒவ்வொரு பேட்டியிலும் சந்தோஷமாக கூறி வருகிறார் சூரி.

அசுரன் படத்துக்கு பிறகு, வெற்றிமாறனின் படமான இது, முதல்பாகம் தான். அடுத்து, விடுதலை 2ம் பாகமும் இந்த ஆண்டிலேயே வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை படத்தில், மலைவாழ் கிராமப் பெண் கேரக்டரில் நடித்ததன் வாயிலாக, ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார் பவானிஸ்ரீ. அந்த அளவுக்கு அவரது கேரக்டர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பண்பட்ட நடிப்பு, அந்த கேரக்டரை வலுப்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.

இவ்வளவு வலுவான, சிறப்பான நடிப்பை தந்த பவானிஸ்ரீ வேறு யாருமல்ல, இளம் நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி பிரகாஷின் தங்கை தான் இவர். இசைக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு இசை மீது ஆர்வமின்றி, நடிப்புத்துறைக்கு வந்து விட்டார். இப்போது, ஒரே படத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றும் விட்டார். விடுதலை படம் பார்த்த ரசிகர்கள் பலரும், சமூக வலைதளங்களில், பவானிஸ்ரீ நடிப்பு குறித்து, பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.,

பவானிஸ்ரீ நடிக்க வருவதற்கு முன்பு, மாடலிங் துறையில் இருந்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல், நடிப்புடன், மாடலிங்கையும் இவரிடம் எதிர்பார்க்கலாம்.
காதல் படத்தில், சேவல் பண்ணையில் குடியிருக்கும் வாலிபர்களில் ஒருவராக நடித்திருப்பார் சூரி.

குளியலறைக்கு முன் நின்றிருக்கும் பரத் திடம், ஸ்டீபனே இங்க ஒட்டிட்டு இருக்கான், அவனுக்கு நீங்க கெஸ்ட்டா? என, கிண்டலாக கேட்டுவிட்டுச் செல்வார். அப்படி ஒரு சாதாரண துணை நடிகராக இருந்த சூரி, வெண்ணிலா கபடிக்குழு படத்தில், 50 பரோட்டோக்கள் சாப்பிடும் காமெடி காட்சி வழியாக, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அடுத்தடுத்த படங்களில், சூரியின் காமெடியை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதால், இன்று இந்திய அளவில் பேசப்படும் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

அதுபோல், சினிமா ஒருவரை எப்போது வேண்டுமானாலும் கோபுரத்தில் தூக்கி உட்கார வைக்கலாம். அந்த வகையில், பவானி ஸ்ரீயும் அடுத்தடுத்த பல உயரங்களை அடைய வாய்ப்புள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version