Tuesday, September 24

பிரபல இளம் நடிகையை விடிய விடிய கெஸ்ட் ஹவுசில் வைத்து 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொடூரம்..! யார் அந்த நடிகை தெரியுமா..?

சினிமா துறையை பொறுத்தவரை தொடர்ந்து பாலியல் புகார்கள் என்பது அனைத்து மொழிகளிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கேரளாவில் மட்டும் தற்சமயம் இந்த பிரச்சனை வெளியில் வர துவங்கியிருக்கிறது. ஆனால் மற்ற சினிமாக்களிலும் இந்த பிரச்சனை தலைவிரித்து ஆடிக்கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகை ஒருவருக்கு நடந்த பாலியல் தொல்லை ஒன்று தற்சமயம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்படும்பொழுது அரசு அதிகாரிகளிடம் தான் அதற்காக நியாயம் கேட்க வருவார்கள்.

விடிய விடிய கெஸ்ட் ஹவுசில் வைத்து

ஆனால் இந்த நடிகைக்கு அரசு அதிகாரிகள் மூலமாகவே பாலியல் தொல்லை நடந்து இருக்கும் காரணத்தினால் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விஷயமாக இது இருந்து வருகிறது. பிரபல பாலிவுட் நடிகையான காதம்பரி ஜெத்வாணிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.

அந்த தொழிலதிபரின் மகன் குறித்து பாலியல் புகார் ஒன்றை கொடுத்திருந்தார் காதம்பரி ஜெத்வானி. இந்த புகாரை அடுத்து இதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அதனை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொடூரம்

ஆனால் ஜெத்வானி மீண்டும் புகார் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான நாகேஸ்வரராவின் மகன் இவர் மீது நில மோசடி புகாரை தொடுத்தார். இந்த வழக்கை தொடர்ந்து கைது செய்யப்பட்டார் காதம்பரி ஜெத்வானி.

ஆனால் அதிகாரப்பூர்வமாக அவர் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அவரை கைது செய்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் நேரடியாக இவரை ஜெயிலுக்கு அழைத்து செல்லாமல் சில நாட்கள் அவரை கெஸ்ட் ஹவுஸில் வைத்து துன்புறுத்தி இருக்கின்றனர்.

யார் அந்த நடிகை

அந்த சமயத்தில் பாலியல் ரீதியாகவும் அவரை மிகவும் மோசமாக நடத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் மிகுந்த அவதிக்கு உள்ளாகி இருக்கிறார் நடிகை காதம்பரி ஜெத்வானி. அதற்குப் பிறகு அவரை அழைத்து வந்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

சிறையிலும் 15 நாட்கள் வைத்து தொல்லை கொடுத்து இருக்கின்றனர். இந்த அதிகாரிகள் இதனை அடுத்து இந்த விஷயத்தை இப்பொழுது வெளியே கூறினால் எந்த நீதியும் கிடைக்காது. ஏனெனில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்தான் அப்பொழுது ஆட்சியில் இருந்தது.

எனவே ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தார் நடிகை ஜெத்வானி. இந்த நிலையில் தற்சமயம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில் இந்த பிரச்சனையை அரசு கையில் எடுத்திருக்கிறது. அந்த வகையில் இந்த பிரச்சனைக்கு காரணமாக இருந்த மூன்று முக்கிய ஐ.பி.எஸ் அதிகாரிகளான ஆஞ்சநேயலு, கிராந்தி ரானா டாடா, விஷால் குன்னி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து கடுமையான தண்டனைகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

Exit mobile version