தயாரிப்பாளர் சொன்னா அதை பண்றது தப்பே கிடையாது..  கூச்சமில்லாமல் ஓப்பனாக கூறிய மீனா..!

தமிழ் சினிமாவில் சிறுவயது முதலே அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்து வந்தவர் நடிகை மீனா. மலையாளம் தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் சிறுவயதிலேயே பிரபலமான நடிகையாக மீனா இருந்து வந்தார்.

தமிழைப் பொறுத்தவரை ரஜினியுடன் சேர்ந்து அவர் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் அவருக்கு அதிகமான பிரபலத்தை பெற்று கொடுத்த திரைப்படம் ஆகும். அதற்கு பிறகு அதிகமாக மக்கள் மத்தியில் தெரிய துவங்கினார். அதற்கு பிறகு அவருக்கான வரவேற்பு என்பதும் அதிகரிக்க துவங்கியது.

தயாரிப்பாளர் சொன்னா?

இந்த நிலையில் தொடர்ந்து பெரிய நடிகர்கள் அனைவரும் மீனாவுடன் நடிப்பதற்கு விருப்பம் தெரிவிக்க துவங்கினர். இதனை தொடர்ந்து மீனாவிற்கு தொடர்ந்து சத்யராஜ் ,கமல்ஹாசன், ரஜினிகாந்த், பாக்யராஜ் என்று அப்பொழுது பிரபலமாக இருந்த பல நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தன.

#image_title

இதனால் மீனா ஒரு கட்டத்திற்கு மேல் முக்கியமான ஒரு நடிகையாக மாறினார். தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் மக்கள் மத்தியில் பரீச்சையமான ஒரு நடிகையாக இவர் இருந்து வருகிறார். அதற்கு பிறகு புது நடிகைகளின் வருகையினாலும் மீனாவிற்கு வயதான காரணத்தினாலும் சினிமாவிலிருந்து விலகினார் மீனா.

அதை பண்றது தப்பே கிடையாது

இருந்தாலும் கூட சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பெரும்பாலும் கதாநாயகனுக்கு அக்கா கதாபாத்திரத்தில் மீனா நடித்து வந்ததை பார்க்க முடியும். இந்நிலையில் இது மீனாவின் பழைய பேட்டி ஒன்று சமீபத்தில் அதிகமாக வைரலாக துவங்கியிருக்கிறது.

இந்த பேட்டியில் மீனாவிடம் நடிகைகள் தொடர்ந்து அதிக கவர்ச்சியாக நடிக்கின்றனர். இந்த மாதிரி நடிப்பது ஒரு பக்கம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் ஒரு பக்கம் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தனர்.

#image_title

ஓப்பனாக கூறிய மீனா

அதற்கு பதில் அளித்த மீனா கவர்ச்சியாக நடிப்பது ஒன்றும் தவறு கிடையாது. தயாரிப்பாளர் சொன்னால் நாம் நடித்துதான் ஆக வேண்டும். ஆனால் அந்த கவர்ச்சிக்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். தேவையான அளவு மட்டும் கவர்ச்சியில் நடித்தால் போதும். முகம் சுளிக்கும் அளவிலான கவர்ச்சி என்பது நன்றாக இருக்காது.

அந்த காட்சியை பார்க்கும் பொழுது நமக்கே அது முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது என்றால் அந்த மாதிரியான காட்சிகளில் நாம் நடிக்க கூடாது என்று கூறுகிறார் மீனா. ஆனால் இப்பொழுது மீனா குறித்து சிலர் சமூக வலைதளங்களில் பேசும் பொழுது மீனா அதிக கவர்ச்சியாக நடித்ததாக கூறுகின்றனர். எனவே போதுமான கவர்ச்சியில் நடித்ததற்கே மீனா ஒரு வகையில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version