நடிகை அனிகா சுரேந்திரன் கடந்த 2004 ஆம் ஆண்டு கேரள மாநிலம் மாஞ்சேரியில் பிறந்தவர். தமிழில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் இஷா என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விசுவாசம், மாமனிதன், பிடி சர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் வெகு சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அறிமுகம் பெற்றிருக்கிறார் அனிகா சுரேந்திரன்.
தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடத்த 2023 ஆம் வருடம் வெளியான ஓ மை டார்லிங் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் தன்னுடைய முதல் முதல் படத்திலேயே லிப் லாக் மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.
தன் மீது இருக்கக்கூடிய குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சொல்ல தயாராக இருக்கிறார் அனிகா சுரேந்திரன்.
இதனை அவரே ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். நான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான காரணத்தினால் பலரும் இன்னும் என்னை குழந்தை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் சினிமாவில் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. என் மீது இருக்கக்கூடிய இந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பம் என்னுடைய திரைப்பட பயணத்துக்கு தடையாக இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன் என பேசியிருந்தார்.
தொடர்ந்து இணைய பக்கங்களிலும் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது இரண்டு கையில் மல்லிகை பூவை சுற்றிக்கொண்டு.. ஒரு வெண்கல பாத்திரத்தில் பாலை ஊற்றி.. அதில் ரோஜா இதழ்களை தூவி ஏதோ முதல் இரவுக்கு தயாரானது போல போஸ் கொடுத்திருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகையும் தோற்றத்தையும் வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.