“பெற்ற தாயே மகளை அனுப்பி.. ரம்யா கிருஷ்ணன் கணவர் பானுப்பிரியாவை..” பலரும் அறியாத ரகசிய பக்கங்கள்..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராகவும் பரிணாமம் எடுத்தார் நடிகை பானுப்பிரியா.

சினிமாவில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து கோடிகளை சம்பாதித்து பெரும் சொத்துக்கு சொந்தக்காரராக இருந்த பானுப்பிரியாவின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமானதாக இருக்கிறது.

இதற்கு என்ன காரணம்..? என்று பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் சமீபத்திய தன்னுடைய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆள்தியிருக்கிறது.

நடிகை பானுப்ரியா ஆரம்பத்தில் பரதநாட்டியத்தில் தான் அதிகமாக ஈடுபாடு கொண்டிருந்தார். அவருடைய வாழ்நாள் லட்சியமே ஒரு மிகப்பெரிய நாட்டிய பள்ளியை தொடங்கி நிர்வகிக்க வேண்டும் என்பதுதான்.

அந்த நேரத்தில் அவரைப் பார்த்த நடிகை ஸ்ரீவித்யா பானுப்பிரியாவின் அழகையும் அவருடைய நலிணத்தையும் பார்த்து சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது என்று கூறி சில திரைப்பட வாய்ப்புகளை பெற்றுத்தர உதவினார்.

இவர் நடிப்பதாக இருந்த முதல் திரைப்படம் கைவிட்டு போனது. நடிகர் பாக்கியராஜ் இயக்கி நடித்த “தூரல் நின்னு போச்சு” படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்தது நடிகை பானுப்பிரியா தான்.

ஆனால் கடைசியாக வேறு நடிகையை ஒப்பந்தம் செய்தார் பாக்யராஜ். இதனால் மனமுடைந்த பானுப்பிரியா சினிமாவில் நான் நடிக்கவில்லை என்று தன்னுடைய அம்மாவிடம் கதறி இருக்கிறார்.

ஏனென்றால் தூரல் நின்னு போச்சு படத்தில் நான் தான் ஹீரோயின் என்று தன்னுடைய தோழிகள், நாட்டிய பள்ளியை ஆசிரியர்கள் என தனக்கு தெரிந்தவர்கள் அனைவரிடமும் சொல்லி பெருமைப்பட்டு இருக்கிறார் பானுப்பிரியா.

ஆனால் கடைசியாக அந்த படத்தில் வேறு நடிகை ஒப்பந்தம் செய்து விட்டார்கள் என்ற தகவல் பானுப்பிரியாவை சுக்கு நூறாக உடைத்து இருக்கிறது.

இதனால் மனம் நொந்து போன பானுப்பிரியா இனிமேல் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்திருக்கிறார். ஆனால், அவருடைய அம்மா, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றால் என்ன தெலுங்கு சினிமாவில் நடிக்கலாம் என்று தெலுங்கில் சில பட வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் கணவர் வம்சி இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை பானுப்பிரியா. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பானுப்பிரியாவுக்கு திட்டு, அடி, உதை என பாடாய்படுத்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணனின் கணவர் இயக்குனர் வம்சி.

நீ அறிமுகமாக கூடிய முதல் திரைப்படம் இது.. இந்த திரைப்படத்தில் உன்னுடைய நடிப்பு பேசப்பட வேண்டும்.. அப்போதுதான் உனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும்.. என்று கூறி பானுப்பிரியாவை அதட்டி.. மிரட்டி வேலை வாங்கி இருக்கிறார் வம்சி.

ஆனால், பானுப்பிரியாவோ தன்னுடைய தாயிடம் வந்து நான் இனிமேல் படங்களில் நடிக்கப் போவதில்லை. அந்த இயக்குனர் எனை அடிக்கிறார். உதைக்கிறார். என அழுது இருக்கிறார்.

அப்போது, பானுப்பிரியாவின் அம்மா பானுப்பிரியாவிடம், ஒரு ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது அடிக்கத்தான் செய்வார். திட்டத்தான் செய்வார். அதை எல்லாம் தாங்கிக் கொண்டால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.

வம்சி இயக்கம் இந்த நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த படத்தில் எப்படியாவது கஷ்டப்பட்டு நடித்து முடித்துவிடு அடுத்தடுத்து உனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என கூறி பானுப்பிரியாவை நடிக்க வைத்திருக்கிறார்.

இத்தனைக்கும் அந்த படத்தில் நடிப்பதற்கு பானுப்பிரியாவுக்கு சம்பளமே கொடுக்கப்படவில்லை. சரி என்று நடித்து முடித்து இருக்கிறார் பானுப்பிரியா. அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

அதனை தொடர்ந்து இவருக்கு என தனி மார்க்கெட் உருவாகி இருக்கிறது. தொடர்ந்து பல்வேறு முன்னணி இயக்குனர்கள் பானுப்பிரியாவை அன்னைக்கு பல்வேறு பட வாய்ப்புகள் கொடுத்திருக்கின்றனர்.

இப்படி கோடிக்கணக்கில் அந்த காலத்திலேயே பணம் சம்பாதித்த நடிகை பானுப்பிரியா ஒரு கட்டத்தில் பட தயாரிப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டார். அதிலும் அவருக்கு வெற்றி தான். ஆனால் அவர் தன்னுடைய தம்பியை ஹீரோவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அவருடைய தம்பி சில ரியல் எஸ்டேட் தொழில்கள் ஈடுபட்டு மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடைந்தார்.

இதனால் இவர் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் அனைத்தும் நஷ்டமாகி போனது மட்டுமில்லாமல் இவருடைய கணவராலும் இவருக்கு பல்வேறு வகையில் இழப்புகள் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை எல்லாம் இழந்து மீண்டும் நடிக்கும் வேலைக்கு வந்தார்.

பல்வேறு மலையாள படங்களில் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் நடிக்க கூட சம்மதம் தெரிவித்து நடித்திருக்கிறார். சீரியல்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு இவருடைய வாழ்க்கை சற்று தேறியது.

அதன் பிறகு இவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது. குறிப்பாக இவருடைய நினைவாற்றல் பெருமளவில் பாதிக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் சொல்லக்கூடிய வசனங்களை நினைவில் வைத்துக் கொண்டு ஷூட்டிங்கில் பேச முடியாத அளவுக்கு தடுமாறினார்.

ஒரு காலத்தில் எவ்வளவு பெரிய நடிகையாக வலம் வந்தவர் பல்வேறு விருதுகளை வென்றவர். ஆனால், இப்போது இருக்கும் சீரியல் நடிகைகள் இவருடன் நடிப்பதை விரும்பவில்லை.

ஏனென்றால் இவருடன் நடிக்கும் போது அதிக டேக்குகள் எடுக்க வேண்டி இருக்கிறது. எங்களுடைய வேலையும் சேர்த்து பாதிக்கப்படுகிறது. வசனங்களை சரியாக நினைவில் வைத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்.

ஒன்று.. இவரை மாற்றுங்கள். அல்லது.. எங்களை மாற்றி விடுங்கள் என சீரியல் இயக்குனர்களிடம் இப்போது இருக்கும் நடிகைககள் சத்தம் போட்டு இருக்கிறார்கள்.

இதனால் பானுப்பிரியாவின் சீரியல் வாய்ப்பும் போய்விட்டது. இவருக்கு இருந்த சில தீய பழக்கங்கள் தான் இவருடைய நினைவாற்றல் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்றும் அப்படியான தீய பழக்கங்களை யாரும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதையும் பானுப்பிரியாவின் அட்வைஸாக இருக்கிறது என பேசி இருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version