கள்ளத்தொடர்பு.. இது தான் சிக்னல்.. ஓப்பனாக போட்டு உடைத்த பிக்பாஸ் சம்யுக்தா..!

பிக்பாஸ் சம்யுக்தா : கணவனோ மனைவியோ கள்ளத்தொடர்பில் இருக்கிறார்கள் என்றால் இதுதான் சிக்னல் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக் பாஸ் போட்டியாளர் சம்யுக்தா சண்முகம் பதிவு செய்திருக்கிறார்.

கடந்த 1985 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்று ஆசையுடன் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார்.

அதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார் ஆனால் சினிமாவில் கதாநாயகியாக இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய முதல் திருமணம் எவ்வளவு மோசமான அனுபவத்தை கொடுத்தது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் தன் கணவர் என்னை விட்டு வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்தார்.

அவர் என்னை மொத்தமாக புறக்கணிக்க ஆரம்பித்தார். அப்போது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வாழ்க்கையில் அடுத்த கட்டமாக என்ன செய்வது..? அல்லது இதை சகித்துக் கொண்டு வாழ்வதா..? என்று தெரியாமல் ஒருவிதமான குழப்பத்தில் இருந்தேன்.

என்னுடைய இதயம் மொத்தமாக உடைந்து விட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் தான் நான் என்னுடைய தோழி தொகுப்பாளினி பாவனாவை சந்தித்தேன். மாஸ்டர் படத்தில் இசையமைத்து விட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு அவர் நான் தங்கி இருந்த அதே அபார்ட்மெண்டில் தான் தங்கி இருந்தார்.

அப்போது என்னுடன் சாதாரணமாக பேசிய போது உன்னுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது..? என்று கேட்டார். நான் என்னுடைய திருமண வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை எல்லாம் கூறிய அழுது கொண்டிருந்தேன்.

அப்போது அவர் கொடுத்த ஆறுதல் தான் எனக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தது. பொதுவாக உங்களுடைய மனைவியோ கணவரோ வேறொருவருடன் கள்ள தொடர்பில் இருக்கிறார் என்றால் அவர் கொடுக்கக்கூடிய சிக்னல் என்ன என்று கேட்டால் அவர் உங்களை புறக்கணிக்க ஆரம்பிப்பார்.. காரணமே இல்லாமல் உங்களிடம் எரிந்து விழுவார்.. எல்லாவற்றிற்கும் உங்களை ஒரு குற்றவாளி போல உணர வைப்பார்.

இது தெரியாமல் நான் நான்கு ஆண்டுகள் காலம் தள்ளி விட்டேன். ஒரு கட்டத்தில் உண்மைகள் தெரிய வரும்போது தான் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து என்னுடைய வாழ்க்கை பயணத்தை நான் மாற்றிக் கொண்டேன் என பதிவு செய்திருக்கிறார் பிக் பாஸ் சம்யுக்தா சண்முகம்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version