பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு பொழுதுபோக்குகாக தொகுப்பாளினியாக சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அதன் பிறகு இவருடைய தொகுத்து வழங்கும் திறன் ரசிகர்களுக்கு பிடித்து போகவே தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்து தற்போது 25 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளம் பெற்றிருக்கிறார்.
திவ்யதர்ஷினி சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் தன்னுடைய நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யதர்ஷினி.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்தார். தற்போது வரை வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் தான் இவருடைய காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நடப்பதற்க்கே கடுமையான சிரமங்களை சந்தித்துக் கொண்டிருந்தது திவ்யதர்ஷினிக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்தது.
விரைவில் பூரண நலம் பெற்று இவர் மீண்டும் தன்னுடைய வேலைகளை தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய விருப்பத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று இருக்கும் திவ்யதர்ஷினி பொது இடத்தில் அமர்ந்து கொண்டு லிப்ஸ்டிக் போடும் போது மறைந்திருந்த அவருடைய நண்பர் அவர் லிப்ஸ்டிக் போடுவதை வீடியோ எடுத்துள்ளார்.
இதனை பார்த்து ஷாக்கான திவ்யதர்ஷினி அதன் பிறகு அந்த வீடியோவை வாங்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.