கேப்ரில்லா : நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் சுமி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக அறிமுகமானவர் நடிகை கேப்ரில்லா.
அதற்கு முன்பே கடந்த 2009 ஆம் ஆண்டு விஜய் டிவி ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
அதன் பிறகு பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். ரியாலிட்டி நிகழ்ச்சிகள், சீரியல்கள் போன்றவற்றில் கலக்கிக் கொண்டிருந்த கேபிரில்லாவுக்கு 3 திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் 102 நாட்கள் அந்த வீட்டில் தாக்குப்பிடித்தார்.
102 வது நாள் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வாக்அவுட் செய்தார். சமீபத்தில் ராஜா ராணி 2, ஈரமான ரோஜாவே, மருமகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் இணைய பக்கங்களிலும் சினிமா நடிகைகளுக்கு இணையான கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.
அந்த வகையில், நீச்சல் உடைகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.
முதன்முறையாக நீச்சல் உடையில் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.