என் பின்னழகை டக்கென பிடித்து அழுத்தி.. நாக்கு நுனியில் அது.. முன்னணி இயக்குனர் மீது இளம் நடிகை பகீர் குற்றச்சாட்டு..!

பிரபல இளம் நடிகை காயத்ரி ரேமா படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, இந்த படத்தில் உனக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கிறேன். உன்னுடைய கதாபாத்திரம் படம் முழுதும் பயணிக்கும்படி செய்கிறேன். அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள தயார் என்றால் சொல்.. என்று பிரபல இயக்குனர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

அவருடைய பெயரை நான் இப்போது வெளியிட விரும்பவில்லை. அவர் அப்படி கேட்டு முடித்ததும், இல்ல சார்.. எனக்கு இருக்கிற கதாபாத்திரமே போதும்.. அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று கூறினேன்.

அப்படி என்றால் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் எல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டுதான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லாம் தப்பு செய்கிறார்கள் என்று சொல்றியா..? என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.

நான் அவர்களை தவறு என்று சொல்லவில்லை. அது அவர்களுடைய விருப்பம். அவர்களுக்கு அது பிடித்திருக்கிறது அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு நடிக்கிறார்கள். அவர்களை நான் தவறானவர்கள் என்று சொல்லவில்லையே என்று கூறினேன்.

அவ்வளவுதான், அடுத்த நிமிடமே குடுகுடுவென ஓடி வந்து என்னுடைய பின்னழகை பிடித்து அழுத்தி.. அப்படி சொல்லும.. உன்ன மாதிரி உடனே ஓகே சொல்ற பொண்ணுங்கள நான் பார்த்ததே இல்லை என்று என்னிடம் கூறினார்.

நான் பதறிப் போய் விட்டேன். சார்.. நான் எப்போ இதற்கு ஒப்புக்கொள்கிறேன் எனக் கூறினேன்..? அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு நடிக்கிறார்கள் என்றால் அவர்களை தவறானவர்கள் இல்லை என்று நான் நினைக்கவில்லை என்று தான் கூறினேனே தவிர நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கிறேன் என்றுதான் உங்களிடம் கூறினேனா..? என்று அவரிடம் சத்தம் போட்டேன்.

இந்த படப்பிடிப்பு தளத்திலேயே உங்களுடைய பெயரை சொல்லி நீங்கள் என்னிடம் என்ன செய்தீர்கள்..? என்று என்னால் கத்திக் கூப்பிட போட முடியும். உங்களுடைய மரியாதையை காப்பாற்றிக் கொள்ளுங்கள். நான் உங்கள் படத்தில் நடிக்கவே இல்லை என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்து விட்டேன்.

எப்போதுமே என்னுடைய அம்மா என் உடன் தான் இருப்பார். அந்த நேரம் பார்த்து ஏதோ ஃபோன் வந்திருக்கிறது என சற்று தூரம் விலகி சென்றார். அந்த நேரத்தில் இயக்குனரிடம் எப்படி நடந்து கொண்டார். இப்படி பல சம்பவங்கள் எனக்கு நடந்திருக்கிறது. அப்படி செய்பவர்களை பார்க்கும் போதெல்லாம் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும் என்று அந்த கெட்ட வார்த்தை எல்லாம் நுனி நாக்கில் வந்து நிற்கும்.

ஆனால் அது நம்முடைய பெயரையும் சேர்த்து பங்கப்படுத்தும். நாம் ஒருவர் மீது புகார் கொடுக்கிறோம் என்றால்.. அதனை நாம் நிரூபிக்க வேண்டி இருக்கும். இப்படியான விஷயங்கள் எல்லாம் நான் எப்படி நிரூபிப்பது..? குறிப்பிட இடத்தில் நாங்கள் இரண்டு பேர் தான் இருக்கிறோம்.. எனும் பொழுது இவர் இப்படி நடந்து கொண்டார் என்றால் எப்படி என்னால் நிரூபிக்க முடியும்..?

இதனால் தான் பல நடிகைகள் யார் மீதும் பெயர் சொல்லி குற்றச்சாட்டு சொல்வது கிடையாது. மற்றபடி குறிப்பிட்ட நபரின் பெயரை சொல்வதால் எங்களுக்கு எந்த சிக்கலும் கிடையாது.

அப்படி சொன்னால் இதனை நாங்கள் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்போம். அதற்கு ஆதாரமோ..? அதனை நிரூபிக்கவோ..? எங்களால் முடியாது அல்லவா..! அதனால் தான் நான் யார் அந்த இயக்குனர் என்று சொல்லவில்லை.

பல நடிகைகளின் தங்களுக்கு நடந்த கொடுமைகளை சொல்வார்கள். தவிர, யார் அது என்று சொல்ல மாட்டார்கள்.

அதற்கு இதுதான் முக்கிய காரணம் நிரூபிக்க முடியாத சில விஷயங்களை இருக்கும் பொழுது குறிப்பிட்டு நபரின் மீது புகார் சொல்வது அது நமக்கு சிக்கலாக போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதால் பிரபலங்களின் பெயர் அடிப்படாமல் இருக்கிறது என தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார் நடிகை காயத்ரி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam