இதனால் தான் பெயரை மாத்திக்கிட்டேன்.. இவானா கூறிய காரணம்.? இவரின் உண்மையானபெயர் தெரியுமா..?

லவ் டுடே திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பெருவாரியான தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படும் முகமாக மாறினார் நடிகை இவானா.

இவருடைய உண்மையான பெயர் அலினா ஷாஜி என்பதாகும். தமிழில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான நாச்சியார் திரைப்படத்தில் கோட்டை அரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு ஹீரோ லவ் டுடே, LGM, மதிமாறன், கள்வன், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் முதல் முதலில் கடந்த 2012 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான மாஸ்டர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவருடைய உண்மையான பெயர் அலினா ஷாஜி என்பதை ஏன் இவானா என்று மாற்றிக் கொண்டேன் என சமீபத்திய பேட்டி ஒன்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, நாச்சியார் படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குனர் பாலா என்னை அழைத்தார். உன்னுடைய பெயர் அலினா ஷாஜி என்று இருக்கிறது. இது சினிமா ரசிகர்களால் எளிதாக உச்சரிக்க முடியாத ஒரு பெயராக இருக்கிறது.

சினிமா பிரபலங்களுக்கு பெயர் என்பது மிக மிக முக்கியமான விஷயம். ரசிகர்கள் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவிலும்.. எளிதில் உச்சரிக்க கூடிய அளவில் அந்த பெயர் இருக்க வேண்டும்.. அப்படி இருந்தால் தான் அந்த பிரபலத்திற்கு நன்றாக இருக்கும்.

எனவே உன்னுடைய பெயரை மாற்றிவிடலாம் என கூறினார். அப்போது எதனால் மாற்ற வேண்டும் என்று எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. அந்த நேரத்தில் இவ்வானா என்ற பெயரை அவர் தான் எனக்கு சூட்டினார்.

இவானா என்ற பெயர் கூட பலராலும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள முடியாத எளிதில் உச்சரிக்க முடியாத பெயராகத்தான் இருக்கிறது எனவே எனக்கு தோன்றுகிறது. ஆனால், இந்த பெயர் மாற்றிய பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் எனக்கு சந்தோஷம் என பதிவு செய்திருக்கிறார் நடிகை இவானா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version