ஜெயம் ரவி எப்படி பட்ட ஆளு தெரியுமா.. நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல.. விவாகரத்து குறித்து பூமிகா விளாசல்..!

நடிகை பூமிகா தமிழில் பத்ரி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அறிமுகம் பெற்றிருக்கிறார்.

தற்போது நடைபெற்ற ஜெயம் ரவி நடித்து வரும் பிரதர் திரைப்படத்தில் நடிகர் நட்டி நடராஜனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் என படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விவாகரத்து குறித்தும் ஜெயம் ரவி மீதான தன்னுடைய பார்வை குறித்தும் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது ஒருவருக்கு வாழ்க்கைத் துணை என்பது அவசியம். வாழ்க்கை துணை தப்பாக இருந்தால் வாழ்க்கையே மோசமானதாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கை துணை என்பது நம்முடைய இருக்கும் வாழ்க்கைக்கு துணையாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து செல்வது தான்.

எனவே வாழ்க்கை துணை ஒருவருக்கு தேவைப்படும் பொழுது அதை மிகவும் அவசியமான ஒன்று. அதே வாழ்க்கை துணை அவருக்கு சிக்கலாக மாறும் போது அதில் தொடர்ந்து இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பது போல விவாகரத்து குறித்து தன்னுடைய பொதுவான கருத்தை பதிவு செய்தார் நடிகை பூமிகா.

அதனை தொடர்ந்து ஜெயம் ரவி குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்தார். அவர் கூறியதாவது, ஜெயம் ரவி நிஜத்தில் கோபப்படவே மாட்டார். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எல்லாவற்றிற்கும் மேலாக அமைதியான ஒரு நபர்.

என்னை பொருத்தவரை ஜெயம் ரவி ஒரு ஜென்டில்மேன். இன்று 90 சதவீத ஆண்கள் தங்களுடைய கைப்பேசியில் தான் அதிகமாக நேரத்தை செலவிடுகிறார்கள்.

ஆனால் ஜெயம் ரவி கைப்பேசியை பயன்படுத்தி நான் பார்த்ததே இல்லை. அவரிடம் செல்போன் இருக்கிறதா..? என்று கூட எனக்கு தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் பலரும் செல்போன் பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் ஜெயம் ரவி கையில் செல்போன் இருந்து நான் பார்த்ததே கிடையாது. அந்த அளவுக்கு அமைதியான இனிமையான ஒரு நபர் ஜெயம் ரவி என பேசி இருக்கிறார் நடிகை பூமிகா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version