அந்த நேரத்தில் கூட உடலுறவு.. திருமணத்திற்கு முன்பே.. குமுறலை பதிவு செய்த காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் பல்வேறு தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் தற்போது இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். உண்மையாக சொல்ல போனால் இந்தியன் 2 படத்திற்காக தான் நடிகை காஜல் அகர்வால் நடித்தார்.

ஆனால், அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் இந்தியன் 3 படத்திற்கு நகர்த்தப்பட்டு விட்டது. தற்போது அந்த படமும் OTTயில் வெளியாக இருக்கிறது. தற்போது திருமணம் செய்து கொண்டு கணவர் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார் நடிகை காஜல் அகர்வால். என்றாலும் கூட, தன்னுடைய இளமை காலத்தில் நடிகை காஜல் அகர்வால் சில சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார்.

அதில் பலரும் அறியாத ஒரு சர்ச்சை இவர் நடிப்பதாக இருந்த ஆணுறை விளம்பரம். பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனத்திற்காக விளம்பரம் செய்து கொடுக்க தயாரான நடிகை காஜல் அகர்வால் அதற்கான அட்வான்ஸ் தொகையையும் பெற்றார்.

இவர் குறிப்பிட்ட ஆணுறை நிறுவனத்தின் விளம்பர தூதராக பணியாற்ற போகிறார் என்ற செய்தி வெளியானதுமே அந்த நிறுவனத்தின் பங்குகள் மற்றும் அவர்கள் தயாரித்து விற்கும் ஆணுறை ஆகியவற்றின் விற்பனை தாறுமாறாக எகிறியது.

இதனை அறிந்த காஜல் அகர்வால் இன்னும் சில கோடிகளை கேட்டு அந்த நிறுவனத்திடம் பெற்றுக் கொண்டார் என்ற தகவல் வெளியாகின. ஆனால் திடீரென அந்த விளம்பரத்தில் நடிக்கப் போவதில்லை என்ற பின் வாங்கி விட்டார் காஜல் அகர்வால். அதற்கு ஏன்னா காரணம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

இதில் கொடுமை என்னவென்றால் நடிகை காஜல் அகர்வால் அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பிக் கொடுத்தார் என்பதுதான்.

காஜல் அகர்வால் அந்த விளம்பரத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியான போதே அந்த நிறுவனத்தின் விற்பனை படுஜோராக நடந்தது. ஆனால், அதற்கு காரணமான காஜல் அகர்வால் கடைசியாக தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்தார்.

இதற்கு பின்னால் அப்படி என்ன சர்ச்சை நடந்தது..? என பலருக்கும் தெரிந்திருக்காது. அப்படி என்ன பிரச்சனை நடந்தது..? என்ற சுவாரஸ்யமான விஷயத்தை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

நடிகை காஜல் அகர்வால் அந்த விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அதே நேரம் நடிகை சன்னி லியோன் அதே நிறுவனத்தின் ஆணுறை விளம்பரத்தின் மாடலாக நடித்திருந்தார். அந்த நேரத்தில் நடிகை சன்னி லியோன் திரைப்படங்களில் எதிலும் நடித்ததில்லை. அந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடித்து இந்தியா முழுவதும் இளசுகள் மத்தியில் பிரபலமாக இருந்த ஒரு நேரம்.

இவருடைய விளம்பரங்களும் சக்கை போடு போட்டது. ஆனால், பிரச்சனை என்னவென்றால்..? குறிப்பிட்ட அந்த ஆணுறை தயாரிப்பு நிறுவனம் நடிகை சன்னி லியோன் நடித்த அந்த விளம்பரத்தை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் என அனைத்து இடத்திலும் வைத்து பரபரப்பை கிளப்பியது.

குறிப்பாக டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் இந்த விளம்பரத்தை செய்திருந்தது அந்த ஆணுறை நிறுவனம். இதுதான் பிரச்சினையை ஆரம்பித்தது. அந்த நிறுவனம் பொது இடங்களில் பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவிகள் குடும்பமாக செல்லும் இடத்தில் இப்படி மோசமான புகைப்படத்துடன் கூடிய விளம்பரத்தை வைத்திருப்பது முகச்சுழிப்பை ஏற்படுத்துகிறது.

இப்படியான ஆணுறை விளம்பரங்களுக்கு கண்டிப்பாக வரைமுறை இருக்க வேண்டும். இந்த விளம்பரத்தை பொது இடத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்ன..? குழந்தைகள்.. கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைவரும் வந்து செல்லும் இடத்தில் இப்படியான விளம்பரங்கள் அவசியமா..? என விமர்சனங்கள் எழுந்தன.

இந்த சம்பவங்கள் எல்லாம் நடிகை காஜல் அகர்வால் அந்த விளம்பரப் படத்தில் நடிப்பதற்கான அட்வான்ஸ் தொகையை பெற்ற அடுத்த சில வாரங்களில் நடந்தவை. இதனால்,  மிரண்டு போன காஜல் அகர்வால் எங்கே இந்த விளம்பரத்தில் நடித்தால் நம்முடைய புகைப்படத்தையும் தெரு தெருவாக போஸ்டர் எடுத்து ஒட்டி தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து விடுவார்களோ..? தன்னை ஒரு மோசமான நடிகை என்ற பிம்பத்தை கட்டமைத்து விடுவார்கள் என்று பயந்து போன காஜல் அகர்வால் ஆளை விடுங்கடா சாமி.. உங்க பொங்கலும் வேணாம் பூசாரித்தனமும் வேணாம் என்று வாங்கிய அட்வான்ஸ் தொகை திருப்பி கொடுத்துவிட்டு போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு ஓடிவிட்டார்.

ஆனாலும் நடிகை காஜல் அகர்வால் ஆணுறை விளம்பரங்கள் குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பதிவு செய்திருந்தார் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அது என்ன கருத்து என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னாள்.. எதற்காக அந்த கருத்தை கூறினார் என்று முதலில் பார்ப்போம்.

இப்படியான சர்ச்சைகள் வெடித்ததை தொடர்ந்து நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆணுறை விளம்பரங்களை பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரசுரம் செய்யக்கூடாது. மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்க கூடிய நேரங்களான அதிகாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆணுறை விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது என ஒரே போடாக போட்டது.

நீதிமன்றத்தின் இந்த அறிவுரையும் சிலரால் விமர்சிக்கப்பட்டது. நடிகை காஜல் அகர்வால் இது குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார். அவர் கூறியதாவது, இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை தான் ஆணுறை விளம்பரங்களை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றால்.. மற்ற நேரங்களில் யாரும் உடலுறவு கொள்வது கிடையாதா..?

பகல் நேரத்தில் கூட உடலுறவு கொள்கிறார்கள்.. இன்னும் சில திருமணத்திற்கு முன்பே கூட இப்படியான வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.. அவர்களுக்கு ஆணுறை பற்றிய புரிதலோ அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பு பற்றிய அறிவோ வேண்டாமா..? அப்படி இருக்கும் பொழுது இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து அதிகாலை ஆறு மணி வரை தான் இப்படியான விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது..? என்று தெரியவில்லை என தன்னுடைய குமுறலை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனுடைய குமுறல் விளம்பர ஒளிபரப்பு நேரம் தொடர்பானதா..? அல்லது வாங்கிய அட்வான்ஸ் திருப்பி கொடுத்துவிட்ட விரக்தியின் வெளிப்பாடா..? என்பதை இந்த கட்டுரையை படிக்கக்கூடிய உங்களின் கவனத்திற்கே விட்டு விடுகிறோம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version