குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. ஆனா இப்போ.. இயக்குனரால் சந்தித்த கொடுமை.. கதறும் காஜல் அகர்வால்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை காஜல் அகர்வால். தற்போது குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடலையே இப்போ இப்படி ஆயிடுச்சு என்று கதறி வருகிறாராம்.. என்ன ஆனது..? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை காஜல் அகர்வால் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆனால், கடைசியாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இரண்டு பாகங்களாக பிரித்து இந்தியன் இரண்டாம் பாகம் இந்தியன் மூன்றாம் பாகம் என இரண்டு பாகமாக வெளிவரும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்தியன் இரண்டாம் பாகத்தில் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இருக்காது என்ற வேதனை எனக்கு இல்லை. ஏனென்றால் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தில் அவ்வளவு அழுத்தமான காட்சிகள் இருக்கின்றன.

அந்த படத்தின் ரிலீஸ் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். தியேட்டரில் ரசிகர்களோடு இந்த படத்தை சேர்ந்து பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் என பல்வேறு பேட்டிகளில் நடிகை காஜல் அகர்வால் கூறியிருந்தார்.

இப்போது விஷயம் என்னவென்றால்..? இந்தியன் திரைப்படத்தை திரையரங்குகள் வெளியிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறது படக்குழு.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை பெற்ற நிலையில் இந்தியன் 3 படத்தை திரையரங்கில் வெளியிடாமல் நேரடியாக OTT தளத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

இதனை அறிந்த நடிகை காஜல் அகர்வால் இந்தியன் படப்பிடிப்பிற்காக குழந்தை இருக்கிறது என்று கூறியும் விடாமல் அழைத்து படமாக்கினார்கள். இந்த படத்தின் கதைக்காகவும் நடிகர் கமலஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்காகவும் அந்த கஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டு நடித்தேன்.

ஆனால் தற்போது இந்த படத்தை நேரடியாக OTTயில் வெளியிடுகிறேன் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது என்பதை அறிந்த காஜல் அகர்வால் புலம்பி வருகிறாராம்.

இருந்தாலும் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்ற நம்பிக்கையும் அவரிடம் இருக்கிறது என அக்கட தேசத்தை ஊடகங்கள் தண்டோரா அடித்துக் கொண்டிருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version