நடிகை லட்சுமி மேனன் திருமணம் உறுதி..? மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை லட்சுமிமேனன். தன்னுடைய அழகான தோற்றம் மற்றும் நடிப்பு திறமையால் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

இவர் நடித்தால் அந்த படம் ஹிட் ஆகிவிடும் என்ற ஒரு சூழல் ஒரு காலத்தில் நிலவியது. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தன.

சிறு வயதிலேயே விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை லட்சுமி மேனன் குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அந்த படத்தில் நடிக்கும் போது அவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு கதாநாயகியாக குட்டி புலி, சுந்தரபாண்டியன், சிவப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டும் இன்றி பல்வேறு மலையாள படங்களிலும் நடித்திருக்கும் இவர் ஒரு பரதநாட்டிய கலைஞரும் ஆவார்.

சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் தன்னுடைய கல்லூரி படிப்பை தொடருவதற்காக சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு படிப்பு தான் முக்கியம் என்று சென்றார். படித்து முடித்தார்.

ஆனால், அவர் படித்துக் கொண்டிருந்த அந்த இடைவெளியில் இவருடைய இடத்தை பல நடிகைகள் நிரப்பி விட்டார்கள். திரும்பி சினிமாவுக்கு வந்த போது இவருக்கு போதுமான அளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பல்வேறு நடிகர்களுடன் காதல் மற்றும் திருமண கிசுகிசுவில் சிக்கியிருக்கும் லட்சுமிமேனன் தற்போது நிஜமாகவே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி சமீபத்தில் வெளியாகி உள்ள தகவல் என்னவென்றால்.. நடிகை லட்சுமிமேனன் ஆந்திராவைச் சேர்ந்த பிரபல இளம் தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் தான் அது.

ஏற்கனவே நடிகர்கள் விஷால், சிம்பு போன்றவர்களை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை லட்சுமிமேனன் என்றெல்லாம் வதந்திகள் பரவின.

இந்நிலையில், தற்போது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரும் தயாரிப்பாளருமான ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து நடிகை லட்சுமி மேனன் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும் இந்த தகவல் இணைய பக்கங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version