49 வயசு.. திருமணம் வேணாம்.. ஆனா.. அந்த ஆசை இருக்கு.. இதை சொல்ல கூச்சப்படல.. நக்மா ஓப்பன் டாக்..!

90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நக்மா, தனது அழகான முகம் மற்றும் சிறப்பான நடனத்தால் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர்.

தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

காதலன், பாட்ஷா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த் உடன் பாட்ஷா படத்தில் நடித்து மிகுந்த பிரபலம் அடைந்தார். படங்களில் நடித்துக்கொண்டிருந்த நக்மா, காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். நக்மா நடித்த படங்களை பார்த்து அவரது நடிப்புத் திறமையை ரசிக்கலாம்.

தமிழில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்திருக்கும் நடிகை நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

49 வயதாகும் நடிகை நக்மா சமீபத்திய பேட்டி ஒன்று தன்னுடைய திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார்.

எனக்கு இப்போது 49 வயது ஆகிறது திருமணம் செய்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம் என்னிடம் இருந்தது கிடையாது.

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் என்னிடம் இல்லை. ஆனால் திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பம் என வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கத்தான் செய்கிறது. இதனை சொல்வதற்கு நான் கூச்சப்படவில்லை.

எல்லா பெண்களுக்கும் இருக்கக்கூடிய ஆசை தான் இது. எதிர்வரும் காலத்தில் இது நடக்கிறதா..? என்பதை பார்ப்போம் என புன்னகை சிந்து முகத்துடன் பேசி இருக்கிறார் நடிகை நக்மா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version