நடிகை நயன்தாரா ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆறு முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். என்றும் ஆனால் அதையும் தாண்டி தயாரிப்பாளர்களுக்கு பல லட்சங்கள் செலவை இழுத்து விடுகிறார் என்றும் பிரபல பத்திரிகையாளர் கலைமாமணி சபிதா ஜோசப் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் கூறியுள்ளதாவது, இன்றைக்கு தயாரிப்பாளர்கள் படம் எடுக்கவே அஞ்சுகிறார்கள். தயாரிப்பாளர்களே படங்களுக்கு கிடைப்பது கிடையாது. நடிகர் நடிகைகள் தாறுமாறாக தங்களுடைய செலவுகளை தயாரிப்பாளர் தலையில் சுமத்தி விடுகிறார்கள்.
இது ஒரு மோசமான போக்கு.. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா.. அவர் படத்திற்கு ஆறு கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.
ஆனால் தன்னுடைய துணைக்கும், பாதுகாப்புக்கும் என பத்து பேரை உடன் அழைத்து வருகிறார். இவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு சாப்பாடும் போட வேண்டும். இது இரண்டையும் நான் தயாரிப்பாக தான் செய்ய வேண்டும்.
மற்றபடி அந்த 10 பேருக்கும் 24 மணி நேரமும் தங்கக்கூடிய இடம்.. போக்குவரத்து செலவு அனைத்துமே தயாரிப்பாளர் கணக்கில் எழுதுகிறார்கள். இது போதாது என்று தற்போது இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு இரண்டு ஆயம்மாக்கள் வருகிறார்கள்.
அவர்களுக்கும் தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுக்க வேண்டியது இருக்கிறது. அவர் அணியக்கூடிய அரைகுறை ஆடை முதல் படுக்கை வரைஎல்லா செலவுகளும் தயாரிப்பாளர் கணக்கில் சேருகிறது. இது என்ன மாதிரியான மனநிலை…? என்று தெரியவில்லை.
சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த பொழுது நடிகை நயன்தாரா இது எல்லாம் எதிர்பார்த்து இருப்பாரா..? ஆனால் இன்று என்னுடைய அனைத்து செலவினங்களையும் தயாரிப்பாளர் தலையில் எழுதுகிறார்.
ஒரு படம் வெளியானால் அந்த படத்திற்கு ஒட்டுமொத்தமாக ஆயுட்காலமே மூன்று நாட்கள் அவ்வளவுதான் இருக்கிறது. நான்காவது நாள் வேறு ஒரு படம் வந்து விடுகிறது.
இப்படி மூன்று நாட்கள் மட்டும் தான் ஒரு படத்திற்கு ஆயுள். அதுவும் படம் நன்றாக இருந்தால்தான். படம் ஏதாவது ஏடா கூடமாக இருந்தால் அதுவும் போய்விட்டது. இப்படி தயாரிப்பாளர் தலையில் சுமையை சுமத்தி வைக்கும் நடிகைகள் தாங்கள் சொந்த தயாரிப்பு வேண்டி வரும் போது மட்டும் கவனமாக இருக்கிறார்கள்.