“ஜானி மாஸ்டரின் தவறான தொடர்பு.. திரும்ப பெறப்பட்ட தேசிய விருது..” நித்யா மேனன் கொடுத்த பதில்..!

பிரபல நடன அமைப்பாளர் ஜானி மாஸ்டர் சமீபத்தில் சக நடிகைகள் மற்றும் நடன கலைஞர்களுடன் தவறான தொடர்பில் இருந்தார். மேலும் தன்னுடைய ஆசைக்கு இணங்காத நடிகைகளை தொந்தரவு செய்தார் போன்ற புகாரின் அடிப்படையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து விவரம் அறிந்து வட்டாரங்களுடன் விசாரித்த பொழுது சில நடிகைகள் ஜானி மாஸ்டருடன் பணியாற்ற வேண்டும் அவர் ஒப்பந்தமாகும் படங்களில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தெரிந்து அவருடன் தவறான தொடார்பில் இருந்திருகிறார்கள்.

ஆனால், அப்படி ஒத்துழைக்காத சில நடிகைகளை ஜானி மாஸ்டர் தொந்தரவும் செய்திருக்கிறார். இது போன்ற காரணங்கள் தான் அவருடைய இந்த மோசமான நிலைமைக்கு காரணம் ஏன்றும் ஜானி மாஸ்டரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண் நடன கலைஞர்கள் ஒருவர் அவர் மீது பாலியல் புகார் கொடுத்ததை தொடர்ந்து ஜானி மாஸ்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்..? ஏற்கனவே இதே போன்ற ஒரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர் தான் ஜானி மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற பறக்க பறக்க என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் ஜானி மாஸ்டர். இந்த பாடலுக்கு நடன அமைத்து கொடுத்ததற்காக இவருக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், பாலியல் புகாரில் சிக்கி கைதானவர் என்ற காரணத்திற்காக அந்த தேசிய விருதினை திரும்பப் பெற்றது இந்திய அரசு.

இந்நிலையில் இதே படத்தில் நடித்த தேசிய விருது பெற்ற அதிக நித்யா மேனனிடம் ஜானி மாஸ்டர் குறித்தும் அவருடைய தேசிய விருது திரும்ப பெறப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை நித்யா மேனன். இதைப் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். ஆனால், அந்த பாடலுக்கு சிறப்பாக நடனம் அமைத்துக் கொடுத்தார். தேசிய விருதுக்கு தகுதியான பாடல் தான் அது. இதற்கு மேல் என்னிடம் ஜானி மாஸ்டர் பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று தெளிவாக பதிலை கொடுத்து நகர்ந்து சென்றார்.

தற்போது நடிகர் தனுசுடன் இட்லி கடை என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version