17 வயசுல இருந்து.. படவாய்ப்புக்காக படுக்கை.. என்னோட விருப்பம்.. பிரியா பவானி சங்கர் ஓப்பன் டாக்..!

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

இது குறித்து அவர் பேசியதாவது, முதலில் நான் என்னிடமிருந்து தொடங்குகிறேன். நான் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் எந்த ஒரு சினிமா அறிமுகமும் இல்லாமல் இந்த துறைக்கு வந்தவள்.

என்னுடைய 17 வயசுல இருந்து.. இப்போது வரை.. யாரும் என்னிடம் தவறான முறையில் அணுகியது கிடையாது. இப்போது வரையுமே பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட்க்கு என்னை இதுவரை யாரும் அழைத்தது கிடையாது.

நான் பழகக்கூடிய நண்பர்கள் என்னை சுற்றியுள்ள திரைத்துறையினர் எல்லாருமே என்னை பாதுகாப்பாக உணர வைத்திருக்கிறார்கள். ஆனால், பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் பழக்கம் இருக்கிறதா..? என்று கேட்டால்.. ஆம் இருக்கிறது. அதனை நான் மறுக்க மாட்டேன்.

எனக்கு தெரிந்த தோழிகள் சில நண்பர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வதும் பகிராமல் இருப்பதும் என்னுடைய விருப்பம்.. அதாவது பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்றால் அது அவர்களுடைய விருப்பம்.

பகிர்ந்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்று இங்கு எதுவும் கிடையாது. அதேசமயம் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் எனும் போது அதனை சரி என்றும் நான் சொல்ல மாட்டேன்.

சிலர் பட வாய்ப்புக்காக இப்படியான விஷயங்களுக்கு உடன்படுகிறார்கள். அது எப்படியான ஒரு பகுதி என்று எனக்கு தெரியவில்லை. நான் பார்க்கக்கூடிய சினிமா சூழ்நிலை வேறு. இப்படி செய்து பட வாய்ப்புகள் பெறக்கூடிய அவர்களுடைய சினிமா சூழ்நிலை மொத்தமாக வேறாக இருக்கிறது.

அவருடைய சூழ்நிலை என்ன என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தற்போது எனக்கு அது புரியவே இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கையைப் பகிரும் பழக்கம் சினிமாவில் இருக்கிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இருக்கிறது.

ஆனால் என்னை இதுவரை அப்படியான நோக்கத்தில் யாருமே அழைத்தது கிடையாது. என்னை சுற்றி இருக்கும் அனைவரும் என்னை பாதுகாப்பாகவே உணர செய்திருக்கிறார்கள் என தன்னுடைய பார்வையை வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam