ஜே ஜே பட ஹீரோயின் பிரியங்கா கோத்தாரி-யின் தற்போதைய நிலை..! – பாத்தா ஷாக் ஆகிடுவீங்க..!

கடந்த 2003 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ஜே ஜே என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா கோத்தாரி இவருடைய உண்மையான பெயர் நிஷா கோத்தாரி என்பதாகும்.

ஜே ஜே திரைப்படத்தில் இவருடைய பெயர் அமோகா என்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. குறிப்பிடத்தக்க ரசிகர் பட்டாளமும் உருவானது.

ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. இதுவே இவருக்கு ஜேஜே திரைப்படமே கடைசி தமிழ் திரைப்படமாக அமைந்துவிட்டது.

அதன் பிறகு தமிழில் ஹீரோயினாகும் வாய்ப்பை அவருக்கு கிடைக்கவில்லை. அதன் பிறகு தெலுங்கு ஹிந்தி மொழி படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு கச்சேரி ஆரம்பம் என்ற திரைப்படத்தில் வாடா வாடா பையா என்ற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் போட்டு இருந்தார். அவ்வளவுதான்.

அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் என பல்வேறு மொழிப் பழங்களில் நடித்திருக்கும் பிரியங்கா கோத்தாரி கடந்த 2017 ஆம் ஆண்டு பாஸ்கர் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கும் பிரியங்கா கோத்தாரி சமீப காலமாக ஆன்மீகம், யோகா, தியானம் என தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

ஆன்மிகம் மற்றும் அமைதிக்கான தேடலில் ஈடுபட்டுள்ளார் அம்மணி. எனவே, இமயமலை மற்றும் முனிவர்களின் குகைகளுக்கு செல்வது அங்கிருக்கும் ரிஷிகள் முனிவர்களுடன் ஆசியை பெறுவது என ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு இருக்கும் இவர் அவ்வப்போது ஆன்மிக சுற்றுலா செல்லும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. ஒரு காலத்தில் இளசுகளின் தூக்கத்தை கெடுத்த அம்மணி தற்போது அமைதி மற்றும் ஆன்மிகத்தேடலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கின்றனர்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *