அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட மாற்றம்.. படப்பிடிப்பு பாத்ரூமில் அரங்கேறிய கொடுமை.. சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி ஓப்பன் டாக்..!

பிரபல சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அவர் கூறியதாவது, ஒரு சீரியலின் படப்பிடிப்புக்காக நீண்ட தூரம் பயணித்து ஒரு கிராமம் போன்ற பகுதிக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கு சென்றோம். அங்கே படப்பிடிப்பு நடக்கிறது.

ஆனால் உடை மாற்றுவதற்கு ஏற்ற வசதியோ..? கழிவறை வசதியோ..? முறையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

உடை மாற்ற வேண்டும் என கேட்டபோது ஒரு அறையை காட்டினார்கள். அந்த அறைக்குள் சென்றால் வெறும் டிரவுசர் மட்டும் அணிந்து கொண்டு மேலே பனியன் கூட அணியாமல் ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார்.

நான் உள்ளே சென்றதும் அவர் அங்கிருந்து கிளம்பி விடுவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவர் நகராமல் அங்கேயே அமர்ந்திருந்தார். எனக்கு பயம் வந்துவிட்டது. உடனே ஆடையை எடுத்துக் கொண்டு நான் வெளியே வந்து விட்டேன்.

படக்குழுவிடம் வந்து இதுபற்றி கேட்டபோது உன்னை விட பெரிய நடிகைகளை இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.

இப்போது தான் நீங்கள் அறிமுகமாகிர்கள். இப்போதே நீங்கள் இப்படி டிமாண்ட் செய்தால் என்ன அர்த்தம்..? அங்கேயே போய் உடையை மாற்றி வாருங்கள் என்று மோசமாக பேசினார்கள்.

மட்டுமில்லாமல் அந்த படப்பிடிப்பு நடந்த வீட்டின் ஒரே ஒரு பாத்ரூம் தான் இருந்தது. அதில் தான் எல்லோருமே அதைத்தான் எல்லோருமே கழிவறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், அந்த வீட்டில் ஏற்கனவே தங்கியிருந்த இரண்டு வயதானவர்களும் அதே பாத்ரூமில் தான் பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

வேறு வழியில்லாமல் நானும் அதையே பயன்படுத்த வேண்டிய சூழலாக இருந்தது. அந்த கழிவறை சுத்தமாக இல்லை. மிகுந்த மோசமான நிலையில் இருந்தது. ஆனாலும், என்ன செய்வது..? என்று தெரியாமல் சில நாட்கள் அந்த கழிவறை தான் பயன்படுத்தி வந்தேன்.

இதன் காரணமாக என்னுடைய அந்தரங்க உறுப்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. மருத்துவர்களிடம் ஆலோசனை செய்த போது அலர்ஜி ஏற்பட்டுள்ளது என கூறினார்கள். பிறகு சிகிச்சை எடுத்து கொண்டு சரி செய்தேன். மிகப்பெரிய தொந்தரவாக்கிப் போனது.

இப்படி முறையான ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தினார்கள். இத்தனைக்கும் எனக்கு சம்பளமும் கொடுத்தது கிடையாது என சீரியலில் அறிமுகமான புதிதில் தான் அனுபவித்த கொடுமைகளை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version