“கொஞ்சம் கூட ரெஸ்ட் விடாம.. உடம்பே அலண்டு போகிடும்..” திருமண உறவு குறித்து கதறும் ரம்யா நம்பீசன்..!

பிரபல மலையாள நடிகையும்.. பின்னணி பாடகியுமான ரம்யா நம்பீசன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணைய பக்கங்களில் வெளியானது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையும் பின்னணி பாடகியுமான ரம்யா நம்பீசன் தமிழிலும் பல்வேறு திரைப்படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார். சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பீட்சா திரைப்படம் இவருக்கு நல்ல வருமான அறிமுகத்தை பெற்று கொடுத்தது. நடிகைகள் என்றால் நடிப்பது மட்டுமில்லாமல் தங்களுடைய பற்றி வரக்கூடிய வழக்குகள் கிசுகிசுக்களை சமாளிக்க வேண்டும்.

அப்படி ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையில் சிக்கியிருக்கிறார் நடிகை ரம்யா நம்பீசன். பிரபல மலையாள நடிகர் ஒருவருடன் இவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல்கள் வெளியாகின.

அடுத்த கணமே தன்னுடைய மறுப்பை பதிவு செய்திருக்கிறார் ரம்யா நம்பீசன். பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கும் இவருக்கும் காதல் இருக்கிறது என்று கிசு கிசுக்கள் வைரலாகி வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர் என்ற புது தகவல்கள் வெளியாகின.

ஆனால், இது குறித்து ரம்யா நம்பீசன் இடம் கேட்டால் அவருக்கு கோபமும் வருகிறதாம்.. அதே சமயம் சிரிப்பு வருகிறதாம்.. திருமணம் என்ற யோசனையே தனாக்கு கிடையாது என்று கூறியிருக்கிறார் அம்மணி.

கொஞ்சம் கூட ரெஸ்ட் விடாம..

இது குறித்து அவர் கூறியதாவது, சினிமாவில் இருவரும் காதலிப்பது போல நடித்த அவர்களுடன் நிஜத்திலும் காதல் வந்துடுமா..? என்ன என்று விவரமாக கேள்வி எழுப்புகிறார் ரம்யா நம்பீசன்.

திருமணம் குறித்து யோசிக்கவே இல்லை என்றும் அதற்குள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டேன் என்றெல்லாம் தகவல்களை பரப்புகிறார்கள்.

தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன் மலையாள படத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பேன் உடனே தமிழ் படத்தில் பணியாற்ற வேண்டும் என்ற சூழல் இருக்கும்.

கொஞ்சம் கூட ரெஸ்ட் விடாம வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்படி இருக்கும் பொழுது திருமணத்தைப் பற்றி எங்கே யோசிப்பது..? என்று கேள்வி எழுப்புகிறார் ரம்யா நம்பீசன்

உடம்பே அலண்டு போகிடும்..

இப்படி தமிழ் படங்கள் தெலுங்கு படங்கள் மலையாள படங்கள் என மாறி மாறி பணியாற்ற வேண்டியிருப்பதால்.. நான் ஒரு மாதத்தில் 15 நாட்கள் பயணத்தில் தான் இருப்பேன்.

இப்படி பயணப்பட்டு கொண்டிருப்பதால் என்னுடைய உடம்பு அலண்டு போகிடும்.. அந்த நேரத்தில் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தால் அதற்குள் இன்னொரு வேலை வந்துவிடும்.. இப்படி ஓய்வெடுக்க கூட நேரமில்லாமல்.. உடம்பு அலண்டு போகும் அளவுக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் திருமணத்தைப் பற்றி உட்கார்ந்து யோசிக்க எனக்கு எங்கே நேரம் இருக்கிறது..? என கேட்கிறார் ரம்யா நம்பீசன்

கதறும் ரம்யா நம்பீசன்..

இப்படி திருமணத்தைப் பற்றிய யோசிக்காமல் இருக்கும் என்னை ஒரு நடிகரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டேன் என்று வதந்திகளை பரப்புகிறார்கள் என்று கதறுகிறார் அம்மணி.

நல்ல குரல் வளம் கொண்ட இவர் மலையாளம் தமிழ் தெலுங்கு மொழிகளில் பாடவும் செய்கிறார். தமிழில் பல்வேறு படங்களில் பாடியிருக்கும் நடிகர் ரம்யா நம்பீசன் திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே காத தூரம் ஓடி விடுவதாகவும்.. அது நடக்கும் போது நடக்கட்டும் என்று கூறி சிரிக்கிறார் ரம்யா நம்பீசன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam