நான் செய்த தவறு..? இதனால் தான் விவாகரத்து ஆனது.. ரகசியத்தை போட்டு உடைத்த நடிகை சமந்தா..!

நடிகை சமந்தா சமீபத்தில் Honey Bunny என்ற சீரியஸில் ஸ்பை ஏஜென்டாக நடித்திருக்கிறார். இந்த படம் குறித்த கேள்விக்கு என்னுடைய திருமணம் ஏன் விவாகரத்தானது என்னுடைய வாழ்க்கை ஏன் இப்படி ஆனது என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சமந்தா தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது தெலுங்கு நடிகர் நாகசைதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பல கோடி ரூபாய் செலவில் தடபுடலாக நடைபெற்ற இவர்களுடைய திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை. இடையில் தங்களுக்குள் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்து பெற்றபோது நாங்க சைதன்யா தரப்பிலிருந்து சமந்தாவிற்கு 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்தார்கள் என்றும் அதனை நடிகை சமந்தா மறுத்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.

விவாகரத்துக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா சமீபத்தில் ஹன்னி பன்னி என்ற சீரியஸில் ஸ்பை ஏஜெண்டாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தில் ஸ்பையாக செயல்பட்டு இருக்கிறீர்கள். அதுபோல நிஜ வாழ்க்கையில் கூட ஸ்பையாக செயல்பட்டு இருக்கிறீர்களா..? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை சமந்தா நிஜ, வாழ்க்கையில் கூட நான் அப்படி செய்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், செய்யாமல் விட்டு விட்டேன். ஸ்பையாக இல்லாமல் இருந்தது நான் செய்த மிகப்பெரிய தவறு என்று பதில் அளித்திருக்கிறார்.

இதன் மூலம் தன்னுடைய விவாகரத்துக்கு என்ன காரணம்..? என்னுடைய வாழ்க்கை ஏன் இந்த நிலைக்கு வந்தது..? என்பது குறித்து சூசகமாக பேசி இருக்கிறார் நடிகை சமந்தா என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version