விஜய் கூட எனக்கு அது வரவே இல்ல.. வெளிப்படையாக போட்டு உடைத்த சாய் பல்லவி..!

நடிகை சாய்பல்லவி ஆரம்பத்தில் தொலைக்காட்சி ரியாலிட்டி நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது இவருக்கு தென்னிந்தியா முழுதும் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

தமிழ் தெலுங்கு மலையாளம் என தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சாய் பல்லவி நடிகர் விஜய் அஜித் போன்ற தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை இதற்கு முக்கியமான காரணம் அவர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிகை சாய் பல்லவி அதனை மறுத்துவிட்டார். அவர்களுக்கு வயது அதிகம் என்ற காரணத்தினால் நடிகை சாய் பல்லவி அவர்களுடன் சேர்ந்து நடிக்க மறுத்துவிட்டார் என்று தகவல்கள் இணைய பக்கங்களில் வெளியாகின.

நடிகை சாய் பல்லவி 40 வயதுக்கு உள்ளே இருக்கும் நடிகர்களுடன் தான் நடிப்பார். 40 வயதிற்கு அதிகமான நடிகர்களுடன் அவர் ஜோடியாக நடிக்க மாட்டார் என்றெல்லாம் பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலா வந்தன

இது குறித்து நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில்  தன்னுடைய தரப்பு விளக்கத்தை போட்டு உடைத்து இருக்கிறார்.

இதில் இப்படி வைரலாக கூடிய தகவல்களில் எந்த உண்மையையும் கிடையாது. விஜய் கூட நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்ததே கிடையாது.

அதேபோலத்தான் அஜித்துடன் நடிக்கவும் எனக்கு எந்த பட வாய்ப்பு வரவில்லை. அப்படி இருக்கும் பொழுது நான் எப்படி அவருடைய படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்க முடியும்.

வாய்ப்பு வந்தால் தானே நடிப்பேனா..? நடிக்க மாட்டேனா..? என்று கூறியிருப்பேன்..! இதுவரை என்னிடம் விஜய் அஜித் படங்களில் நடிக்க வேண்டும் என்று என்னை யாரும் அணுகியதே கிடையாது.

அப்படி இருக்கும் போது நான் அவர்களுடன் நடிக்க மறுத்தேன் என்று வரக்கூடிய தகவல்களில் எப்படி உண்மை இருக்க முடியும்..? நிச்சயமாக அவர்களுடன் நடக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அந்த படத்தின் கதை என்னுடைய கதாபாத்திரத்தின் தன்மை ஆகியவற்றை பொறுத்து நான் முடிவெடுப்பேன் என பேசியிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version