Site icon Tamizhakam

சாய் பல்லவிக்கு வந்த புது சிக்கல்.. சர்ச்சையில் சிக்கிய பேச்சு..!

தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை சாய் பல்லவி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் 1992-ஆம் ஆண்டு மே மாதம் கோவையில் ஒரு படுகர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். 

இவர் தனது பள்ளி படிப்பை கோவையில் இருக்கும் அவிலா பெண்கள் கான்வெட்டில் படித்ததை அடுத்து சியார்சியாவில் இருக்கும் திபிலீசி அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் படிப்பை 2016-இல் முடித்து மருத்துவராக இருக்கிறார். எனினும் இந்திய மருத்துவராக இன்னும் பதிவு செய்து கொள்ளவில்லை. 

சாய் பல்லவிக்கு வந்த புது சிக்கல்.. 

சாய் பல்லவி கல்லூரி காலங்களில் இருந்தே நடனப் போட்டியில் கலந்து கொண்டவர். இவர் 2008-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சிகள் பங்கேற்றார். 

அது போலவே 2009-இல் தெலுங்கு தொலைக்காட்சி யான இ டிவியில் அல்டிமேட் டான்ஸ் என்ற நிகழ்ச்சிகளும் பங்கேற்றதை அடுத்து இவருக்கு 2005-ஆம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளி வந்த கஸ்தூரிமான் என்ற படத்திலும் 2008-இல் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். 

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் கவனத்தை செலுத்தி வரும் இவர் 2015-ஆம் ஆண்டு வெளி வந்த பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமாகி மலர் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தை பக்காவாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் கிடைத்தார். 

இதை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் கரு,கணம், மாரி 2, என்கேஜி, கார்கி போன்ற படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தற்போது சிவகார்த்திகேயனோடு இணைந்து அமரன் என்ற படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இந்நிலையில் அண்மையில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பைக்காட் சாய் பல்லவி என்ற ஹேஷ்டேக் பகிரப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் சீதா தேவியாக சாய் பல்லவி நடிக்க வலது சாரி ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பை தற்போது தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

சர்ச்சையில் சிக்கிய பேச்சு..

இதனை அடுத்து சீதையாக ராமாயணத்தில் நடிப்பதை அடுத்து பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கும். இவர் 2022-இல் பேசிய வீடியோவை சுட்டிக்காட்டி வலதுசாரி ஆதரவாளர்கள் இவருக்கு கடுமையான எதிர்ப்பை பைகார்ட் சாய் பல்லவி என்று சொல்லி வருகிறார்கள். 

மேலும் அந்த வீடியோவானது விராட பருவம் என்ற திரைப்படத்தின் நேர்காணலில் ராணுவ வீரர்கள் குறித்து இவர் பேசிய வீடியோவை சுட்டிக்காட்டி எதிர்ப்புகள் வலுத்து வருகிறது என்று சொல்லலாம். அப்படி அவர் என்ன பேசி இருக்கிறார் என்று நீங்கள் யோசிக்கலாம். 

அவர் பேசும் போது பாகிஸ்தானியர்களின் பார்வையில் இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் தீவிரவாதிகளாகத் தான் தென்படுவார்கள் என்று அவர் பேசி விட்டார். இது தான் அந்த வீடியோவின் சாராம்சம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இதனை சுட்டிக்காட்டி தான் தற்போது வலதுசாரிகள் சாய் பல்லவி சீதையாக நடிக்க கூடாது என்று பைக்காட் சாய் பல்லவி என்ற ஹேஷ் டேக்கை வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். இதை அவர்கள் பகிர்ந்து வருவதை விட எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். 

இதை அடுத்து இந்த விஷயமானது இணையங்களில் வேகமாக பரவி வருவதோடு வெடித்திருக்கும் இந்த சர்ச்சையால் சாய் பல்லவிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக அவரது ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். எனவே இது அமரன் பட வசூலை பாதிக்குமா? என்பது போல ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

Exit mobile version