Site icon Tamizhakam

ட்ரெஸ் போடல.. வெறும் ப்ளாஸ்டிக் கவரை சுத்திகிட்டு.. சாய் பல்லவி.. தீயாய் பரவும் வீடியோ.. ரசிகர்கள் ஷாக்..!

நடிகை சாய் பல்லவி இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்று கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்.

திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று கேட்டதால் பல்வேறு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை மறுத்திருக்கிறார் சாய்பல்லவி.

ரசிகர்கள் தன்னை வழக்கமான உடையிலேயே.. குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் பார்ப்பதைத்தான் ரசிக்கிறார்கள்.. அதுவே எனக்கும் பிடித்ததாக இருக்கிறது.

ஒரு 20 ஆண்டுகள் கழித்து என்னுடைய குடும்பம் குழந்தைகளுடன் நான் நடித்த படத்தை பார்க்கும் பொழுது முகம் சுளிக்காத வகையில் என்னுடைய படம் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

இதனால் கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என கூறுகிறார் நடிகை சாய் பல்லவி. மேலும், அழகு சாதன பொருள் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்குமாறு நடிகை சாய் பல்லவியிடம் கேட்டபோது அழகு என்பது ஒருவருடைய மனதை பொருத்தது.

அவருடைய நிறத்தை பொருத்தோ.. அவருடைய முகம் வெள்ளையாக இருக்கிறதா கருப்பாக இருக்கிறதா என்பதை பொருத்தோ கிடையாது.. இப்படியான விளம்பரத்தில் நடிப்பதன் மூலம் வெள்ளையாக இருந்தால்தான் அழகு என்பதை நான் ஒப்புக் கொள்வது போலவும் மக்களை தவறாக வழிநடத்துவது போலவும் இருக்கும்.

வேறு எந்த நடிகையை வேண்டுமானாலும் வைத்து உங்களுடைய நிறுவனத்தின் விளம்பரத்தை தயாரித்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக இப்படியான அழகு சாதன விளம்பரத்தில் நான் நடிக்க மாட்டேன் என இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க முன்வந்தும் அந்த நிறுவனத்திடம் நோ சொன்னவர் நடிகை சாய் பல்லவி.

மேலும் படங்களில் முழு அர்ப்பணிப்புடன் நடிக்கும் சாய் பல்லவி சமீபத்திய படம் ஒன்றில் வயதானவர் தோற்றத்தில் நடிப்பதற்காக மேக்கப் போடும் வீடியோ காட்சி வழியாக வைரலாகி வருகிறது.

இதில், ஆடை எதுவும் அணியாமல் வெறும் பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு அமர்ந்திருக்கும் சாய் பல்லவியின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version