நயன்தாராவுக்கு இது தெரியாது.. மோசமான ஆளு.. ரகசியத்தை போட்டு உடைத்த நயன்தாரா..!

நடிகை சரண்யா பொன்வண்ணன் நடிகை நயன்தாரா குறித்து தன்னுடைய பார்வையை வெளிப்படையாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, நடிகை நயன்தாரா யாருடனாவது பேசாமல் இருக்கிறார்.. ஒருவரிடம் பேசுவதை தவிர்க்க ஆரம்பிக்கிறார்… என்றால் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் அந்த நபர் மிகவும் மோசமான ஆளு என்பதை.

இது நயன்தாராவின் அகங்காரமா ஆணவமா என்று நீங்கள் தவறாக யோசிக்க கூடாது. அவர் இருக்கும் உயரத்திற்கு அவர் அப்படியும் இருக்கலாம். ஆனால், தனக்கு யாராவது சிக்கல் கொடுக்கிறார்கள்.. பிரச்சனை கொடுக்கிறார்கள்.. என்றால் அவர்களை கண்டு கொள்ளாமல் அவர்களிடம் இருந்து அப்படியே விலகி சென்று விடுவார்.

ஒரு உண்மையான ஆத்மா என்றால் அது நடிகை நயன்தாரா என்று நான் கூறுவேன். அந்த அளவுக்கு பொறுமையாக.. ஆளை விடுங்கப்பா சாமி.. என்று தன்னுடைய வேலையை மட்டும் கவனித்துக் கொண்டு தன்னுடைய எந்த ஒரு பலத்தையும் மற்றவர்களுக்கு எதிராக பயன்படுத்தாத ஒரு பெண் நடிகை நயன்தாரா.

இதனை ஏன் பெருமையாக கூறுகிறேன் என்றால் நயன்தாராவிடம் இருக்கக்கூடிய இந்த குணம், பண்பு என்னிடம் கிடையாது. என்னிடம் யாராவது பிரச்சனை செய்தாலோ..? எனக்கு சிக்கல் கொடுத்தாலோ..? கண்டிப்பாக நான் அவர்களிடம் சண்டை போடுவேன். கோபப்படுவேன் .

என்னிடம் இருக்கக்கூடிய இந்த கோபமும் சண்டை போடும் தன்மையும் நயன்தாராவிடம் கிடையாது. பொதுவாக எல்லோருமே நமக்கு ஏதேனும் பிரச்சனை செய்கிறார்கள் என்றால் அவர்களிடம் நாம் சண்டை போடுவோம் மல்லு கட்டுவோம்.

ஆளை விடுப்பா சாமி என்று ஒதுங்கி போகக் கூடியவர்கள் சிலர் தான். அதில் நடிகை நயன்தாராவும் ஒருவர். அவரிடம் இருக்கும் பலம் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், அதனை தனக்கு சாதகமாகவோ மற்றவருக்கு எதிராகவோ பயன்படுத்தாத ஒரு உயிர் நடிகைநயன்தாரா என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகை சரண்யா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version