முகத்தை துணியால் மூடிவிட்டு.. அந்த இடத்தில் செருப்பை வைத்து.. வெளிப்படையாக போட்டு உடைத்த ஷகீலா..!

நடிகை ஷகிலா சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கை கொடுத்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

பலரும் அறியாத சில ரகசியங்களையும் போட்டு உடைத்திருக்கிறார். இது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றின் பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் ஷகீலா தன்னுடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கை குறித்து பேச தொடங்கினார்.

உடம்பு மட்டும்தான் இருந்தது..

அவர் கூறியதாவது, நான் சினிமாவில் நடிக்க வந்ததற்கு காரணம் என்னுடைய குடும்ப சூழ்நிலை. பணத்திற்காக தான் சினிமாவில் நடிக்க வந்தேன். என்னுடைய அப்பா ஒரு சூதாடி.

கிளப்புகளில் சூதாடி எங்கள் குடும்பத்தை மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் கொண்டு வந்து விட்டார். என்னுடைய அம்மா ஒரு மெஸ் நடத்திக் கொண்டிருந்தார். அதுவும் நஷ்டமாகிவிட்டது.

ஒரு கட்டத்தில் என்னுடைய அப்பா இறந்த பிறகு எங்களுடைய குடும்பத்தில் பொருளாதார சிக்கல் தீர்க்க முடியாத அளவுக்கு இருந்தது. ஒட்டுமொத்த குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலில் நான் இருந்தேன்.

அந்த நேரத்தில் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி சினிமாவில் நுழைந்தேன். ஒரு கட்டத்தில் என்னிடம் எதுவும் இல்லை என்ற நிலையில் என்னுடைய உடம்பு மட்டும்தான் இருந்தது.

அப்போது மலையாள படம் ஒன்றில் நடித்த எனக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க முன் வந்தார்கள். ஏற்றுக்கொண்டு அந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். நான் யார் பிழைப்பையும் கெடுக்கவில்லை.. யார் பணத்தையும் திருடவில்லை.. யார் குடும்பத்தையும் கெடுக்கவில்லை.. நான் என்னுடைய உடலை வைத்து சம்பாதிக்கிறேன் என்பதில் எனக்கு பெருமையாக இருந்தது.

சினிமாவில் அறிமுகமாகும் போதே.. இந்த மாதிரியான படங்களில் நடித்த நான் என்று கேட்டால் கிடையாது. ஒரு கட்டத்தில் என் குடும்பத்திற்கு பணம் தேவை அதிகமாக இருந்தது. என்னுடைய அக்கா கர்ப்பமாக இருந்தார். அப்பாவும் இறந்து விட்டார். குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது.

முகத்தை துணியால் மூடிவிட்டு..

ஏதோ பெரிய பெரிய இயக்குனர்கள் எனக்கு பட வாய்ப்புகள் கொடுக்க முன் வந்தது போலவும்.. அவற்றை நான் தட்டிக் கழித்து விட்டு இது போன்ற படங்களில் நடித்தது போலவும் கூறுகிறார்கள்.

அப்படியெல்லாம் கிடையாது அந்த காலத்தில் எனக்கு ஆண் ரசிகர்கள் அதிகமாக இருந்தார்கள். இதனால் பெண்களுக்கு என்னை பார்த்தாலே பிடிக்காது. ஏனென்றால் பல பேர் யாருக்கும் தெரியாமல் முகத்தை துணியால் மூடிவிட்டு என்னுடைய படத்தை பார்ப்பார்கள்.

இதனால் பெண்களுக்கு என் மீது வெறுப்பு இருந்தது.

அந்த இடத்தில் செருப்பை வைத்து..

ஒரு முறை திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தேன். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் என்னை புர்கா அணிந்து கொண்டு வர சொன்னார்கள். நானும் புர்கா அணிந்து கொண்டு சென்றேன்.

ஆனால் படத்தில் ஒன்றும் அணியாமல் நடிக்கக்கூடிய இவள் எப்படி புர்கா போடலாம் என அந்த இடத்தில் செருப்பை வைத்து அடிக்க வந்தார்கள். அப்போது இனிமேல் துர்கா போட மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

நல்ல கதை உள்ள படங்களிலும் நான் நடித்திருக்கிறேன். ஆனால், என்னை வைத்து பல காட்சிகளை படமாக்கி விட்டு நான் நடித்திருந்த படுக்கை அறை காட்சியை மட்டும் படத்தில் இணைத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

இப்படி சில மலையாள படங்கள் வெளியாகின. இதன் காரணமாக நான் இனிமேல் மலையாள படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு ஏற்கனவே நான் வாங்கி இருந்த 23 படங்களுக்கான அட்வான்ஸ் திருப்பி கொடுத்துவிட்டு வந்து விட்டேன்.

அதன் பிறகு நான்கு ஆண்டுகள் வீட்டில் எந்த வருமானமும் இல்லாமல் இருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு யாருமே சினிமா வாய்ப்பு தர முன்வரவில்லை. இவரை படத்தில் போட்டால் படத்தின் நிலைமை மாறிவிடும் என்பதால் எனக்கு பட வாய்ப்பு கொடுக்க மறுத்தார்கள்.

அதன் பிறகு ஜெயம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது அதன் பிறகு தான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு ஒளி தெரிந்தது என பல விஷயங்களை பேசி இருக்கிறார் நடிகை ஷகீலா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version