கருடன் பட நடிகை ஷிவதா நாயர். தமிழ் தெலுங்கு மலையாளம் என சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கக் கூடிய திறமையான நடிகை.
தன்னுடைய இயல்பான மற்றும் எதார்த்தமான நடிப்பு கொண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்து வருவதால் ரசிகர்கள் மனதில் பசுமரத்து ஆணி போல பகிர்ந்து இருக்கிறார் நடிகை ஷிவதா நாயர்.
தமிழில் இவர் நடிப்பில் வெளியான “நெடுஞ்சாலை” திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஒரு கிராமப்புற பெண்ணின் கதாபாத்திரத்தில் எதார்த்தமாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
கணினியில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்ற இவர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்தார். தனது பள்ளி பருவத்தை கேரளாவில் கழித்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான “கேரளா கஃபே” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
சமீபத்தில், கருடன் படத்தில் நடித்திருந்தார்.. வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்றுக்கொண்டு நடித்து வருகிறார். கிராமப்புற பெண்ணாக இருந்தாலும் சரி மாடர்னான பெண்ணாக இருந்தாலும் சரி ஹீரோயினாக இருந்தாலும் சரி வில்லியாக இருந்தாலும் சரி என பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்திக் கொண்டிருக்கிறார்.
இயற்கையான நடிக்கும் திறன் கொண்டவர் என்று இவரை பலரும் நேச்சுரல் ஆக்டர் என்று வர்ணிக்கிறார்கள். மலையாளம் மற்றும் தமிழ் மொழி இரண்டையும் சரளமாக பேசும் ஷிவதா நாயர் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணத்திற்கு முன்பு திரைப்படங்களில் ஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் பொழுது ஏதேனும் தயக்கம் இருக்குமா..? அந்த நேரத்தில் உங்கள் காதலன் ஏதாவது கூறுவார் என்று பயப்பட்டு இருக்கிறீர்களா..?
இப்போது சரி.. என்றாலும்.. திருமணத்திற்கு பிறகு இதனால் ஏதாவது பிரச்சனை வரும் என்று யோசித்தது உண்டா..? உங்கள் காதலன் இது குறித்து ஏதாவது உங்களிடம் பேசியது உண்டா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை ஷிவதா நாயர், திருமணத்திற்கு முன்பும் சரி.. திருமணத்திற்கு பின்பும் சரி.. என்னுடைய நடிப்பில்.. படங்களில் அவர் தலையிட்டது கிடையாது.
இப்படியான காட்சியில் நடிக்க வேண்டும்.. இப்படியான காட்சியில் நடிக்க கூடாது.. என்றெல்லாம் அவர் எந்த விதிமுறையும் விதித்தது கிடையாது. ஆனால், நான் தான் கேட்டிருக்கிறேன்.
இந்த படத்தில் லிப்லாக் காட்சி இருக்கிறது.. எனக்கு நடிப்பதற்கு சங்கடமாக இருக்கிறது.. நடிக்கலாமா வேண்டாமா..? என்று அவரிடம் கேட்டு இருக்கிறேன். பல நேரங்களில் இப்படியான காட்சிகள் இருப்பதால் முன்னணி ஹீரோக்களின் படங்களை கூட நான் தவற விட்டு இருக்கிறேன்.
அப்படி நான் தவறவிட்ட படங்கள் வெற்றி படங்களாகவும் இருந்திருக்கின்றன. பலரும் என்னை அணுகி இந்த படத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருந்திருக்குமே.. எதனால் தவறவிட்டீர்கள்..? அந்த ரொமான்ஸ் காட்சிக்காக எல்லாம் இந்த படத்தை தவற விடுவதா..? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள்.
அவர்கள் சொல்வதும் சரிதான். ஆனால், என்னுடைய பார்வையில் இருந்து இப்படி ரொமான்ஸ் காட்சியில் நடித்து தான் பட வாய்ப்பு பெற வேண்டும் என்று எனக்கு அவசியம் கிடையாது.
ஒரு நடிகையாக இதனை செய்வது உங்கள் கடமை தான் என்று அனைவரும் கூறுவார்கள்… அது சரிதான்.. ஆனால், என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் இதில் அடங்கும்.
ரொமான்ஸ் காட்சிகள், லிப் லாக் காட்சிகளை சரி என்றோ தவறு என்றோ நான் கூறவில்லை. படத்திற்காக படத்தின் காட்சிகளுக்காக கதைக்காக அப்படி என காட்சிகள் அவசியம் தேவைப்படும். அது இயக்குனர்களின் முடிவு. கதை ஆசிரியர்களின் முடிவு.
நான் நடிக்க மறுக்கிறேன் என்பதற்காக அது மோசமான காட்சி என்றோ அது அவர் மோசமான இயக்குனர் என்று அர்த்தம் சொல்லவில்லை. என்னுடைய தனிப்பட்ட பார்வையில் இப்படியான காட்சிகளை நடிப்பதை நான் விரும்பவில்லை.
அதனால் அப்படி ரொமான்ஸ் காட்சிகளில் இருக்கும் படங்களில் நான் நடிப்பதை ஒப்புக்கொள்ளவில்லை எனவும் இதை சொல்வதற்கு எனக்கு கூச்சமில்லை எனவும் பதிவு செய்து இருக்கிறார் நடிகை ஷிவதா நாயர்.