படப்பிடிப்பு தளத்தில் தான் அதை சொல்லுவாங்க.. அதனால.. ரகசியம் உடைத்த சிங்கம் புலி நீலு ஆண்ட்டி..!

நீலு ஆண்ட்டி : பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், துணை நடிகையாகவும் நடித்திருக்கும் நடிகை நீலு நஸ்ரின் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளுக்கு நடக்கும் அசவுகரிங்கள் மற்றும் சிக்கல்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அவர் கூறியதாவது துணை நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் எப்போதுமே வசதிகள் குறைவு தான். சில நேரங்களில் உடை மாற்றுவதற்கு இயற்கை உபாதை கழிப்பதற்கு கூட சரியான வசதிகள் இருக்காது.

அதையெல்லாம் சமாளித்து தான் அந்த படங்களில் நடித்து சம்பளம் வாங்க வேண்டும். ஆனால், பொதுவாக பல்வேறு நடிகைகள் துணை நடிகைகளுக்கு ஏற்படும் தர்ம சங்கடமான விஷயம் என்னவென்றால் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் அல்லது நடனம் ஆட வேண்டும் இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது என்று சொல்லி அழைத்துச் செல்வார்கள்.

ஆனால், படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பிறகுதான் உண்மை என்ன.? என்றே தெரிய வரும். அங்கு சென்ற பிறகுதான் என்ன கதாபாத்திரம்..? எப்படியான உடை அணிய வேண்டும்..? என்றெல்லாம் விவரமாக சொல்வார்கள்..

ஒரு படப்பிடிப்பு தளம் என்றால் வீட்டிலிருந்து 5 கிலோ 10 கிலோ மீட்டர் இருக்காது. 200 கிலோ மீட்டர் 500 கிலோ மீட்டர் எல்லாம் பேருந்தில் பயணம் செய்து செல்ல வேண்டிய சூழல் இருக்கும்.

அதற்காக தனியாக பஸ் அல்லது வேன் தயார் செய்து கொடுப்பார்கள். அவ்வளவு தூரம் பயணம் சென்று படப்பிடித்தளத்தில் மிகுந்த கலைப்புடன் இருக்கும் நேரத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும், இப்படி நடனம் ஆட வேண்டும், குட்டியான ஆடைகளை அணிய வேண்டும், என்றெல்லாம் அங்கே தான் கூறுவார்கள்.

ஒரு வேலை நாம் கிளம்புவதற்கு முன்பே இதனை சொல்லி இருந்தார். விருப்பம் இல்லாத நடிகைகள் இங்கேயே இருந்திருப்பார்கள். ஆனால், வாய்ப்பு இருக்கிறது எனக் கூறி நீண்ட தூரம் பிரயாணத்திற்கு பிறகு கலைப்பாக இருக்கும் நேரத்தில் இப்படி கூறுவார்கள்.

அந்த நேரத்தில் எவ்வளவு தூரம் பயணம் செய்து வந்து விட்டோமே என்று சிலர் அப்படியான உடைகளை அணிய ஒப்புக் கொள்வார்கள். இன்னும் சிலர் பணத்தேவை இருக்கிறதே.. வேறு வழியில்லை என்பதற்காக அப்படியான உடைகளை அணிய ஒப்புக்கொள்வார்கள்.

வெகு சில நடிகைகள் மட்டும் விரும்பி அப்படி என ஆடைகளை அணிவார்கள். எனக்கு தெரிந்தவரை 80 சதவீதத்திற்கும் மேலாக வேறு வழியில்லாத காரணத்தினாலும் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்து வீணாகிவிடும் என்ற ஒரு ஏமாற்றத்தினால் தான் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு பின்னணி நடிகைகளாக நடனம் ஆடுவதோ அல்லது கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பதோ நடக்கிறது.

மற்றபடி படப்பிடிப்பு தளத்தில் இருக்கக்கூடிய வசதிகள் குறைவு கூட பெரிய விஷயம் கிடையாது. ஆனால், இந்த விஷயத்தை பல நடிகைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நானும் கூட சில படங்களில் நடிக்க சென்று அங்கே மோசமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்ட காரணத்தினால் விலகி இருக்கிறேன்.

பல நடிகைகள் இதுபோல விளக்கிச் சென்று இருக்கிறார்கள். ஆனால் 80 சதவீத நடிகைகள் விதியே என நடிக்க ஒப்புக் கொள்வார்கள் என பேசி இருக்கிறார் நடிகை நீலு நஸ்ரின்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version