“என்னோட அந்த உறுப்பில் நிஜமான பாம்பை விட்டு..” அறையை பூட்டி.. நடிகை சிவரஞ்சனி கூறிய பகீர் தகவல்..!

கன்னட மொழியில் 1990 ஆம் ஆண்டு வெளியான ஹ்ருதய சாம்ராஜ்ய என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சிவரஞ்சனி. அதனை தொடர்ந்து தமிழில் மிஸ்டர் கார்த்திக் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து தலைவாசல், டேவிட் அங்கிள், சின்ன மாப்பிள்ளை, பொன்விலங்கு, கலைஞன், தாலாட்டு, ராஜதுரை, ராசா மகன் என பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் கடைசியாக 1994 ஆம் ஆண்டு வெளியான செந்தமிழ் செல்வன் என்ற திரைப்படத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பிறகு தமிழில் இவர் நடிக்கவில்லை.  சினிமாவின் உச்சத்தில் இருக்கும் பொழுது 1997 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார். இவரும் ஒரு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான கலைஞன் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த நடிகை சிவரஞ்சனி பாடல் காட்சி ஒன்றில் பாம்புடன் மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார்.

அவர் கூறியதாவது கலைஞன் திரைப்படத்தில் கொக்கரக்கோ கோழி என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். அதில் ஒரு பெரிய மலைப்பாம்பை வைத்துக்கொண்டு நடனமாடி இருப்போம்.

படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விட்டேன். என்னுடைய மேக்அப் மேன் வந்து மேடம் பாம்பெல்லாம் வந்திருக்கு என்ன பண்ண போறாங்கன்னு தெரியல என்று கூறினார். எனக்கு எதுவும் புரியவில்லை. என்னது பாம்பு வந்திருக்கிறதா..? நான் படப்பிடிப்புக்கே வரவில்லை என்று அறையை பூட்டி கொண்டேன்.

அதன்பிறகு என்னிடம் வந்து சமாதானப்படுத்தி பாம்பு நம்மை ஒன்னும் செய்யாது நாம் அதனை ஏதாவது செய்தால்தான் அது சீறும் மற்றபடி அது அதனுடைய வேலையைத்தான் செய்யும் என என்னென்னமோ கூறிய என்னை அந்த பாடலில் நடிக்க சம்மதித்து விட்டார்கள்.

சரி என ஒப்புக்கொண்டு அந்த பாடலில் நடித்தேன். ஒரு காட்சியில் அந்த பாம்பையினுடைய முகத்தின் அருகில் கொண்டு வந்து நடிக்க வேண்டும். அந்த காட்சியில் மெல்லமாக அந்த பாம்பின் கழுத்தை பிடித்துக் கொண்டு என்னுடைய முகத்தின அருகில் கொண்டு வந்தேன்.

அந்த நேரத்தில் நான் எதிர்பார்க்காத சமயத்தில் டக்கென தன்னுடைய நாக்கால் என்னுடைய கன்னத்தை அந்த பாம்பு நக்கியது. என்னுடைய உடம்லெல்லாம் நடுங்கி போய்விட்டது என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை.

ஒரு வழியாக அந்த பாடல் காட்சியை படமாக்கி முடித்தார்கள். அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் நான் பாம்புடன் நடிக்கும் காட்சிகள் இருந்திருக்கின்றன.

ஒரு திரைப்படத்தில் பாம்பாகவே நான் நடித்திருந்தேன். அப்போதெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பாம்பை எடுத்து வந்து என்னுடைய மடியில் வைத்துக் கொள்வேன். அந்த அளவுக்கு பாம்பின் மீது இருந்த என் பயம் போய்விட்டது.

பிறகு யோசித்தேன் பாம்பு ஒரு உயிரினம் தானே அதனை கண்டு நாம் ஏன் பயப்படுகிறோம் என்று தான் யோசித்து இருக்கிறேன் என பேசி இருக்கிறார் நடிகை சிவரஞ்சனி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version