சிறுநீர் வாடைக்கு நடுவே.. ஈரமான உடையில்.. ரொமான்ஸ் காட்சி..கூச்சமின்றி கூறிய புன்னகையரசி சினேகா..!

நடிகை சினேகா தன்னுடைய முதல் படத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்தும்.. மோசமான அனுபவம் இருந்தாலும் திரையில் அந்த காட்சியை பார்க்கும் பொழுது மிகவும் சுவாரஸியமாக, அழகாக இருந்தது என்றும் சமீபத்திய பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.

நடிகை சினேகா தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல்வேறு முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கப்படும் நடிகை சினேகா, சினிமாவில் அறிமுகமான பொழுதில் குடும்பப்பாங்கன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு, பட வாய்ப்புகள் குறைவதை அறிந்த அவர் கிளாமர் ரூட்டிற்கு தன்னை மாற்றிக் கொண்டு கவர்ச்சி ராணியாகவும் வலம் வந்தார்.

பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் பணியாற்றி இருக்கும் இவர் தற்போதும் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர், விரும்புகிறேன் படத்தில் இடம்பெற்ற ஒரு ரொமான்ஸ் காட்சி குறித்து பேசி இருக்கிறார்.

அதில் கதாநாயகனை நான் மறைந்து இருந்து சந்திப்பது போன்ற ஒரு காட்சி.. அதுவும் ஒரு ஆட்டு கொட்டகைக்குள் அவருடன் ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சி.. அந்த நேரத்தில் மழை வேறு பெய்து கொண்டிருந்தது.

சுற்றிலும் ஆடுகள் அந்த ஆடுகளுக்கு நடுவே கதாநாயகனுடன் நான் ரொமான் செய்ய வேண்டும்.. என்னுடைய முதல் படத்தில் இப்படி ஒரு காட்சியை… நான் எதிர்பார்க்கவே இல்லை.

மிகவும் சிரமப்பட்டு அந்த காட்சியில் நடித்து முடித்தோம். படப்பிடிப்பின் போது நிறைய சிரமங்களை எதிர் கொண்டேன். குறிப்பாக அது வேறு ஏதாவது காட்சியாக இருந்தால் பரவாயில்லை.

ஆனால் அது ஒரு ரொமான்ஸ் காட்சி.. சுற்றிலும் நிறைய ஆடுகள் இருப்பதால் ஏதாவது ஒரு ஆடு சிறுநீர் கழித்துக் கொண்டே இருக்கும்.. அந்த சிறுநீர் வாடகைக்கு நடுவே.. மழையால் ஈரமான உடையுடன்.. ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும்.

அந்த சூழ்நிலையை ஒரு நிமிஷம் நீங்கள் யோசித்து பாருங்கள்..? ஆனால் படத்தில் ஒரு காட்சியாக பார்க்கும் பொழுது அது அவ்வளவு அற்புதமாக இருந்தது. இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் அவ்வளவு சிரமமான ஒரு அனுபவமாக அந்த காட்சி படமாக்கப்படும்போது இருந்தது என பேசி இருக்கிறார் நடிகை சினேகா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version