ஸ்ரீவித்யாவின் கடைசி ஆசை..! நிறைவேராமேலே போன கொடுமை..!

கடந்த 1953 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. கடந்த 2006 ஆம் ஆண்டு தன்னுடைய 53 வயதில் அக்டோபர் 19ஆம் தேதி தன்னுடைய முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக உயிரிழந்தார்.

கடைசியாக 2003 ஆம் ஆண்டு வெளியான சொப்பனம் கொண்டு துலாபாரம் என்ற படத்தில் நடித்திருந்தார் முதன் முதலில் 1967 ஆம் ஆண்டு திருவருட்செல்வர் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் பின்னணி பாடகியாகவும் சில படங்களில் பாடியிருக்கிறார்.

குறிப்பாக நடிகர் கார்த்தி நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான அமரன் திரைப்படத்தில் டிரிங் டிரிங் என்ற பாடலை பாடியிருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கும் இவர் சில தொலைக்காட்சி செய்திகள் கடந்த 1978 ஆம் ஆண்டு ஜார்ஜ் தாமஸ் என்ற பிரபல மலையாள இயக்குனர் திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீவித்யா.

ஆனால் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்தார். திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் கமலஹாசன் உடன் காதலில் இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட உண்மைதான் என்று திரையுலகில் இருக்கக்கூடிய பலரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

கணவரை பிறந்த பிறகு தன்னுடைய தனிமையை நேசித்து வந்த நடிகை ஸ்ரீதிவ்யா ஒரு கட்டத்தில் தனிமையை வெறுக்க தொடங்கி இருக்கிறார். இதனால் தன்னை தானே பலகீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சரியாக உணவு உண்ணாமல் இருப்பது.. வழக்கமான வாழ்வியல் விஷயங்கள் எதையும் செய்யாமல் தன்னை கஷ்டப்படுத்தி கொள்வது என இருந்திருக்கிறார். இதனால் முதுகு தண்டுவடத்தில் இவருக்கு ஏற்பட்ட பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகி தீர்க்க முடியாத நோயாக மாறியது.

இதனால் 2006 ஆம் ஆண்டு உடல் இளைத்து உயிரிழந்தார். தன்னுடைய கடைசி காலத்தில் தன்னுடைய முதல் காதலன் கமல்ஹாசனை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்து இருக்கிறார் ஸ்ரீவித்யா.

ஆனால், கடைசிவரை அது நடக்காமலே போயிருக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam