தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியராக வலம் வருபவர் கவிஞர் வைரமுத்து. பல்வேறு இரட்டை அர்த்த அர்த்தம் பொதிந்த பாடல்களை எழுதி இருக்கிறார். இவர் எழுத்தில் வெளியான பல பாடல்கள் ஹிட் அடித்து இருக்கின்றன.
பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் வைரமுத்துவின் பாடல்கள் ரசிக்கும் படியாக இருந்திருக்கின்றன. சமீப காலமாக இவர் தொடர்ந்து சில சர்சைகளில் சிக்கி வருகிறார் குறிப்பாக முன்னணி பின்னணி பாடகியான சின்மயி ஸ்ரீபாதா இவர் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார்.
வெளிநாடுகளில் பாடல் கச்சேரிகளில் கலந்து கொள்ளும் பொழுது இவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை கொடுத்து இருக்கிறார் என்று பகிரங்கமாக புகார் தெரிவித்தார்.
இவருடைய இந்த புகார் பெரிய பேசு பொருளானது. இதனால், பலரும் வைரமுத்துவுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். ஆனால், கவிஞர் வைரமுத்து மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
Vairamuthuசமீபத்தில் தன்னுடைய குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் நடிகை சின்மயி ஸ்ரீபாதா. ஆனால் அவர்களுடைய முகத்தை காட்டாமல் புகைப்படம் வெளியிட்டிருந்தார்.
ஏன் குழந்தைகளின் முகத்தை காட்டவில்லை என்ற கேள்வி எழுப்பிய பொழுது என்னுடைய குழந்தையின் முகத்தை காட்டினால் ஏன் வைரமுத்து போல இல்லை என்று சிலர் கேள்வி எழுப்ப வாய்ப்பு இருக்கிறது. அப்படியான சமூகத்தில் தான் நான் இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும் என பேசியிருந்தார்.
Vairamuthuஇது மீண்டும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில், மற்றொரு பாடகி புவனா சேஷன் என்பவரும் சின்மயி ஸ்ரீபாதா கூறிய வைரமுத்து மீதான பாலியல் புகார் உண்மைதான் என்றும் அவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் புகார் கூறியுள்ளார்.
சின்மயி சமீபத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து பாடகி புவனா சேஷன் என்பவரும் தன்னை வைரமுத்து தவறாக அழைத்தார் என்று #MeToo வில் பாலியல் புகார் கூறி சின்மயிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
Vairamuthuஇந்நிலையில் அவர் மீண்டும் #MeToo குறித்து தற்போது பேசியுள்ளார். அதில்…”எனக்கு நடந்த தவறை சொல்ல என் மகன் எனக்கு அளித்த நம்பிக்கைக்கு பிறகு தான் வெளியில் சொல்ல எனக்கு தைரியம் வந்தது.
வைரமுத்து மட்டுமே இவ்வாறு நடந்துகொண்டதாக கூறவில்லை. இன்னும் சிலரும் இப்படி பெண்களை படுக்கைக்கு அழைக்கத்தான் செய்கின்றனர். அனால் அதில் பெரும்பாலானோர் படுக்க மறுத்ததும் அமைதியாக சென்றுவிடுவார்கள்.
Vairamuthuஆனால் நான் வைரமுத்து மீது மட்டும் குற்றம்சொல்ல காரணம் அவர் மட்டும்தான் நான் அவரின் ஆசைக்கு இணங்காததால் எனக்கு வந்த அத்தனை பாடல் பாடும் வாய்ப்பையும் தொடர்ந்து பலவழிகளில் தடுத்தார். மேலும் இதேபோல் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இதை வெளியில் சொல்லவேண்டும்” என்றார்.