நடிகை நயன்தாரா நடிகை என்பதைத் தாண்டி தொழிலதிபராவும் சமீப காலமாக ரசிகர் மத்தியில் அடையாளம் காணப்படுகிறார் என்பதை அறிவோம்.
பெண்களுக்காண அழகு சாதன பொருட்கள் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் நயன்தாரா மற்றும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் இருவரும்.
இந்நிலையில், இந்த பொருட்களின் தரம் குறித்தும் தன்மை குறித்தும் விவரிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில், இந்த பொருட்களின் மூலம் பயன்பெற்ற பயனாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா இந்த பொருளை வாங்குங்கள்.. இது சிறந்தது.. இதனை பயன்படுத்துங்கள்.. என்று விளம்பரங்களில் கூறுவது கடினம். அவர் தனிப்பட்ட முறையில் அதனை பயன்படுத்தி அதன் மூலம் ஒரு நல்ல அனுபவத்தை பெற்றிருந்தால் மட்டும்தான் ஒரு பொருளை பற்றி பேசுவார்.
நயன்தாராவிடம் இந்த தொழில் யோசனை சொன்னபோது முதலில் அவர் அந்த நாப்கினை பயன்படுத்த ஆரம்பித்தார். கிட்டத்தட்ட ஒரு ஆறு மாதம் பயன்படுத்தினார். பீரியட்ஸ் நேரங்களில் வரக்கூடிய மூட் ஸ்விங்க்ஸ் இந்த நாப்கின்களை பயன்படுத்துவம் போது வரவில்லை என்பதை உணர்ந்தார் நயன்தாரா.
பீரியட்ஸ் நேரங்கள் என்றால் எப்போதும் ஒரு விதமான கோபத்துடனும், மன இறுக்கத்துடனும் தான் இருப்பார் நயன்தாரா. ஆனால் இந்த நாப்கின்னை பயன்படுத்த ஆரம்பித்த பிறகு அவரிடம் மூட் ஸ்விங்க்கை நான் பார்க்கவில்லை.
ஏனென்றால் இந்த Femi9 நாப்கினில் ANION என்ற ஒரு விஷயம் இருக்கிறது. இது மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு வரக்கூடிய அந்த மூட் ஸ்விங்குகள் வராமல் பார்த்துக் கொள்ளக் கூடியது என்று கூறினார்கள்.
இதனை முதன்முதலில் நான் கேட்ட பொழுது அஜித் படத்தில் ஒரு காமெடி தான் நினைவுக்கு வந்தது. ஆட்டோ கண்ணாடியை திருப்பினால்.. எப்படி ஆட்டோ ஓடும் என்று தான் யோசித்தேன்.
ஆனால், நயன்தாரா நிஜமாகவே அதனை அனுபவித்தார். இந்த நாப்கின் பயன்படுத்தும் பொழுது மூட் ஸ்விங்ஸ் வருவது கிடையாது என கூறினார். அப்போதுதான் எனக்கு நம்பிக்கை வந்தது.
அதன் பிறகு இந்த தொழிலை செய்யலாம் என்று முடிவெடுத்து இதற்கு உண்டான வேலையில் இறங்கினோம். தொழில் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று நாங்கள் யோசிக்கவே இல்லை.
தற்போது வரை யோசிக்கவில்லை. இந்த உன்னதமான ஒரு பொருளை எப்படி அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்பது என்பது தான் என்னுடைய முதல் சிந்தனையாக இருந்தது. அதனுடைய முயற்சியில் தற்போது ஈடுபட்டு இருக்கிறோம் வந்து கூறி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.