பிரபல இளம் நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
துப்பாக்கி படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியானது. இருந்த போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று நல்ல வசூல் செய்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தமிழ் தெலுங்கு மொழிகளில் பிஸியான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பிரபல ஹீரோ மீது வரலட்சுமி சரத்குமார் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாரதப்பட்டை சண்டைக்கோழி 2 விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகை வரலட்சுமி நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் சினிமா வாய்ப்புக்காக என்னை அட்ஜஸ்ட் செய்ய சொன்னார்கள் என வரலட்சுமி சரத்குமார் கூறியிருப்பது வைரலாகி வருகிறது. சினிமா பின்புறம் இல்லாத நடிகைகளுக்கு இது போன்று நடப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அவர்களும் பொதுவெளியில் இது குறித்து வெளிப்படையாக கூறி இருக்கிறார்கள்.
ஆனால் பிரபல நடிகரின் மகள் இவர் என்ன தெரிந்தும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்துள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழ் தெலுங்கு என முன்னணி ஹீரோக்களின் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் காதலித்து வருகிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலானது.
ஆனால் நடிகர் விஷால் நடிகர் சரத்குமாரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கி பெரும் புயலை கிளப்பினார். இதனால் வரலட்சுமிக்கு விஷாலுக்கும் இடையே ஏற்பட்ட பிரிவு அவருடைய திருமணத்தை தடுத்து நிறுத்தியது எனவும் கூறுகிறார்கள்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர் சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பது பற்றி பேசி இருக்கிறார். எனக்கே பாலியல் சீண்டல்கள் நடந்திருக்கிறது.
பிரபல ஹீரோ ஒருவர் மற்றும் முன்னணி இயக்குனர் வருவார் என பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் பண்ண முடியுமா..? என கேட்டிருக்கிறார்கள். அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமென்றால் அப்படி என்ற பட வாய்ப்புகள் வேண்டாம் என மறுத்து விடுவேன்.
எந்த ஒரு குற்ற உணர்வு இல்லாமல் இரவில் நிம்மதியாக தூங்க வேண்டும். நடிக்க வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டேன் என கூறினேன். சமீபகாலமாக சினிமாவில் நடிகைகள் இப்படியான பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் இதனை கூறியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
சமீபத்தில் தான் முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை கூறியிருந்தனர். இந்நிலையில் முன்னணி நடிகரின் மகளான வரலட்சுமி சரத்குமார் இது குறித்து பேசி இருப்பது ரசிகர்கள் மற்றும் திரை துறையினருடைய பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு இருக்கிறது.
Summary in English : The casting couch culture in the Kollywood film industry has been a topic of discussion for many years. Recently, actress Varalakshmi Sarathkumar opened up about her experience with this culture and the challenges that she faced while trying to make it as an actress in the industry.